இம்போட் மிரர் தனிச்சிறப்பு மிக்க பணியை ஆற்றிவருகின்றது - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

7ஆவது ஆண்டில் தடம்பதிக்கும் இம்போர்ட் மிரர் ஊடக வலையமைப்புக்கு தனது வாழ்த்துக்களையும் - பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

7ஆவது அகவையில் இன்று கால்பதிக்கும் இம்போர்ட் மிரர் ஊடக வலையமைப்புக்கு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நவீன ஊடக யுகத்தில் புரட்சிகரமான ஆரம்பத்தை எடுத்துள்ள இம்போர்ட் மிரர் ஊடக வலையமைப்பானது 2010ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை சிறப்பான முறையில் இயங்கி வருகின்றது. நடுநிலையான செய்திகளை வழங்குவதிலும், சமூகத்தை தெளிவூட்டும் விடயத்திலும் இம்போர்ட் மிரர் தனிச்சிறப்பு மிக்க பணியை ஆற்றியுள்ளது; ஆற்றிவருகின்றது. 

எதிர்காலத்திலும் மேலும் பல ஊடக சாதனைகளை படைத்து தொடர்ந்தும் முன்னேறிச் செல்ல எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் இம்போர்ட்மிரர் குழுமத்துக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் - என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -