பி. கரிஷ்-
வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் ஒழுங்கமைப்பில் கழகத்தின் தலைவர் திரு பேரின்பநாதன் அனோஜன் தலைமையில் வெகு சிறப்பாக இளைஞர்களின் பங்களிப்புடன் 12.04.2017அன்று காலை 9.00 மணிமுதல் மதியம் 12.30 மணி வரை வவுனியா இரத்த வங்கியில் சிறப்பாக நடைபெற்றது.
வவுனியா இரத்த வங்கியில் கடும் இரத்த தட்டுப்பாடு நிகழும் இவ் வேளையில் இளைஞர்களின் இவ் மகத்தான பணி மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.
இவ் நிகழ்வில் புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்),வவுனியா மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ. கேசவன், ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.