மோட்டர் சைக்கிள் விபத்து - ஒருவர் உயிரிழப்பு...!

க.கிஷாந்தன்-
நானுஓயா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட நானுஓயா டெஸ்போட் மேற்பிரிவு தோட்டத்தில் 15.04.2017 அன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் கடும் காயங்களுடன் நுவரெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தோட்டத்தில் இடம்பெற்ற ஆலய திருவிழாவில் கலந்து கொண்ட பின் தனது நண்பரின் மோட்டார் சைக்கிளை எடுத்து குறித்த நண்பரையும் ஏற்றிக்கொண்டு செலுத்திய மேற்படி நபர், வேக கட்டுப்பாட்டை இழந்து பாதையிலிருந்து விலகி தோட்டத்தில் லயக்குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் குறித்த இளைஞர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதித்த பின் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மற்றொருவர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த விபத்து சம்பவத்தினால் குறித்த தோட்டத்தில் இடம்பெறவிருந்த ஆலய தேர் திருவிழாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -