முசலி பிரதேச சபைக்குற்பட்ட கிராமங்களில் ஒன்றான கொண்டச்சி கிராமத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இஸ்தாபகத் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களினால் அமைக்கப்பட்ட வீடுகள் இன்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. 30 வருட அகதி வாழ்க்கையிலிருந்து வெளியேறிவரும் இந்த தருணத்தில் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறிவரும் மக்களுக்கு நிரந்தர வீடொன்றை அமைத்துக்கொடுக்கும் நோக்குடன் இவ் வீடுகள் வழங்கிவைக்கப்பட்டது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் அமைச்சரின் சகோதரருமான றிப்கான் பதியுதீன் அவர்களும் இன்னும் பல முக்கிய உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது உரையாற்றிய அமைச்சர்;
"அன்புச் சகோதரர்களே உண்மையில் இன்று நான் மிகவும் சந்தோசமாக இருக்கின்றேன் காரணம் நாங்கள் 30 வருடங்களுக்கு முன்பு எமது சொந்த இடங்களை விட்டு உடுத்திய ஆடையுடன் வெளியேறிய நாங்கள் மீண்டும் எமது சொந்த ஊரில் குடியேறக்கூடிய சந்தர்ப்பத்தை இறைவன் எமக்கு அமைத்துத் தந்திருக்கின்றான் இதற்கு காரணம் அவன் நம்மீது கொண்டுள்ள இறக்கம்தான் இன்று எமது சமூகத்தை பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாகவும் வெட்கமாகவும் இருக்கின்றது குரானை மறந்த ஒரு சமூகமாக மாறி வரக்கூடிய ஒரு நிலையில் இருக்கின்றோம் இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால் நாங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் வாழப்போவது இல்லை மரணம் என்று எம்மை தேடிவருமென தெரியாது ஆனால் அது வந்தே தீரும் நாம் இருக்கும் போதே எமது பிள்ளைகளுக்கும் எமது சமூகங்களுக்கும் குரானையும் ஹதீஸ்களையும் நபிகளாரின் வரலாறுகளையும் அவர்களின் அடிமனதில் பதிய வைக்க வேண்டும் ஒரு பெற்றோராக உங்கள் பிள்ளைகளுக்கு சேர்க்கவேண்டிய சொத்து ஸாலிஹான இறைநம்பிக்கை கொண்ட குணங்களையே தவிர வேறேதும் இல்லை.
உங்களுக்குத் தெரியும் நாம் இங்கிருந்து வெளியேறுவதற்கு முன்பு எத்தனையோ வசதி படைத்தவர்கள் இருந்தார்கள் செல்வங்கள் நிறைத்து வைத்திருந்தார்கள் ஆனால் நாங்கள் சென்ற விதம் என்ன யாராலும் மறக்க முடியாது ஒரு சோப்பின் பையுடன் சென்றோம். ஆனால் அகதியாக நாம் சென்றாலும் இறைவன் எம்மை கைவிடவில்லை எதிர்த்துப் பேச ஆதரவற்று வெளியேறிய நாங்கள் பெரும்கொண்ட பலத்துடன் இங்கு வந்தோம் சோப்பினுடன் சென்ற நான் ஒரு அமைச்சராக அதுவும் மீள்குடியேற்ற அமைச்சராக வந்தேன் அந்த நேரத்தில் உங்களுக்கு தெரியும் தமிழ் மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மேனிஃபாம்களிலே தங்கியிருந்தார்கள் அவர்களுக்கு தேவையான அனைத்தும் செய்து அவர்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றினேன் இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால் எனது பதினாறு வருட அரசியலில் 20,000ம் வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளேன்.
இன்னும் கட்டிக்கொண்டு இருக்கின்றேன் இந்த வீடுகள் வழங்கும் பொழுது நீங்கள் எந்த மதம் என்று கேட்கவில்லை நீங்கள் எந்த கட்சி என்று கேட்கவில்லை நீங்கள் எந்த இடம் என்றும் கேட்கவில்லை தமிழராக இருந்தாலும் சரி முஸ்லிமாக இருந்தாலும் சரி அவர்கள் எந்த கட்சியென்றாலும் சரி இறைவன் சாட்சியாக மனசாட்சிக்கு துரோகமின்றி அனைவருக்கும் வீடுகளை வழங்கினேன் கரணம் அகதி சமூகமாக நாங்கள் இருந்தபோது பட்ட துன்பம் நானும் பட்டிருக்கின்றேன் பாதிக்கப்பட்டவர்களை வைத்து நான் அரசியல் செய்ய முனையவில்லை எனக்கு கிடைத்த பதவியின் மூலம் மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்து வருகின்றேன்.
ஆனால் இன்று எமது சமூகத்தில் சிலர் என்ன காரணம் என்றே தெரியாமல் என்னை அளிக்க நினைக்கின்றார்கள் என்னை அழித்துவிட்டால் அவர்கள் இங்கு கோடி கட்டி பறக்க முடியுமென நினைக்கின்றார்கள் ஆனால் நீங்கள் சிந்திக்க வேண்டும் வன்னிக்கு மட்டுமல்ல இந்த வடக்கிற்கே இருக்கின்ற அமைச்சர் நான் மட்டும்தான் இந்த ஆட்சியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கும் அந்தஸ்தை இறைவன் எனக்கு தந்திருக்கின்றான் எனவே சகோதரர்களே அப்பாவி மக்களிடம் இனவாத அரசியலை புகுத்த நினைக்கும் அரசியல் வாதிகளிடம் கூறுங்கள் இறைவன் உங்களை பார்த்துக்கொண்டிருக்கின்றார் இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள் என்று இன்ஷா அல்லாஹ் மீண்டும் நான் உங்களிடம் கேட்டுக்கொல்வது உங்கள் பிள்ளைகளை இறைவழியில் கொண்டுசெல்லுங்கள் " என தனதுரையில் தெரிவித்தார்.