ஷபீக் ஹுஸைன்-
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தேசிய ஐக்கிய மன்றத்தினால் வசதிகுறைந்த பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கண்டி பொல்கொல்ல கூட்டுறவு மண்டபத்தில் இன்று (08) நடைபெற்றபோது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருடான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
தேசிய நீர்வழங்கல் சபையின் வேலைத்திட்டப் பணிப்பாளர் மஹிலால் சில்வா, முன்னால் பிரதேச சபை உறுப்பினர் அம்ஜத் முத்தலிப், கண்டி மாநகரசபை முன்னால் உறுப்பினர் அஸ்மி மரிக்கார் கண்டி தேசிய நீர்வழங்கல் வடிக்கலாமைப்புச்ச சபையின் பிரதி பொது முகாமையாளர். உதவி பொதுமுகாமையாளர் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.