க.கிஷாந்தன்-
மீதொட்டுமுல்ல குப்பை மேடுசரிவினால் பாதிப்படைந்த மக்களுக்கு நுவரெலியா - டயகம மேற்கு 5ம் பிரிவு தோட்ட மக்கள் 17.04.2017 அன்று மதியம் 12 மணியளவில் குறித்த தோட்டத்தில் அனுதாபங்களை தெரிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அத்தோடு மேற்படி குப்பை மேடுசரிவில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி, விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தி ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினார்கள்.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக சகஜ வாழ்க்கைக்கு திரும்புமாறும் பிரார்த்திப்பதாகவும், அவர்களுக்கு வெகு விரைவில் நிவாரண உதவிகள் கிடைக்க வேண்டும் எனவும், இவ்வாறான சம்பவம் ஒன்று இனிமேலும் நடக்க கூடாது எனவும் குறித்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.