பள்­ளி­வாசல், இந்து ஆலயம் அமைக்க அனு­மதி பெறவேண்டும் - பௌத்த விகா­ரைகளுக்கு அல்ல

லங்கை பௌத்த நாடு. பெரும்­பான்மை சிங்­கள மக்­களைக் கொண்ட இந்த நாட்டில் மேலும் பத்­தா­யிரம் விகா­ரைகள் அமைக்­கப்­படல் வேண்டும். அதற்­கான திட்­டங்­களும் எம்­மிடம் உள்­ளன. இதனைத் தடுப்­ப­தற்கு யாரும் முன்­வ­ரக்­கூ­டாது என பொது­பல சேனாவின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

இறக்­காமம் மாயக்­கல்லி பிர­தேச விகா­ரைக்­கான காணி பெறும் விடயம் தொடர்­பாக அம்­பாறை மாவட்ட செய­ல­கத்­தில் அர­சாங்க அதிபர் துசித்த வணி­க­சிங்க தலை­மையில் நடை­பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

தொடர்ந்து பேசுகையில்,

பொத்­துவில் பிர­தே­சத்­தி­லுள்ள முகு­து மாவிகா­ரைக்கு 293 ஏக்கர் காணி உள்­ளது. ஆனால் விகா­ரையின் நிர்மாணப் பணிக்கும் பரா­ம­ரிப்­புக்­கு­மாக 4 ஏக்கர் மட்­டுமே உள்­ளது. மீதி அனைத்தையும் முஸ்லிம் மக்கள் பிரித்­தெ­டுத்­துள்­ளனர். இதே­போன்று சம்பூர் பிர­தே­சத்­திலும் நாம் பல விட்டுக் கொடுப்­பு­க­ளுடன் காணி­களை வழங்கி உள்ளோம். இன்­றைய கட்­டத்தில் காணியைப் பெற்றுக் கொடுப்­பது மாவட்ட செய­லா­ளரின் கட­மை­யாகும்.

மேலும் முஸ்லிம் பள்­ளி­வாசல், இந்து ஆலயம் என்­பன அமைப்­ப­தற்கே உரிய அனு­மதி பெறப்­ப­ட­வேண்டும். ஆனால் பௌத்த விகா­ரைகளுக்கு அவ்­வா­றான அனும­திகள், எதுவும் பெறப்­ப­டா­மலே நிர்மாணப்­ப­ணி­களை ஆரம்­பிக்­கலாம்.

எனவே மாயக்­கல்லி பிர­தே­சத்­தி­லுள்ள காணிச் சொந்­தக்­கா­ரர்­க­ளுக்கு மாற்றுக் காணி 2 ஏக்கர் வழங்கிவிட்டு விகாரை அமைப்பதற்கான காணியை பெற்றுத்தருவதற்கு மாவட்ட செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -