அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை.மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சுத்தமான குடிநீர் இல்லாமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நோயாளர்கள் மிகவும் அவதியுறுவதாக பாதிக்கப்ட்டவர்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.
மொறவெவ பிரதேசத்தில் அண்ணளவாக எட்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருவதாகவும் அதிலும் 24 மணி நேரமும் இயங்கி வருகின்ற ஒரு சிறந்த பிரதேச சைத்தியசாலையாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றற போதிலும் நோயாளர்கள் மாத்திரைகளை போடுவதற்கு கூட சுத்தமான குடிநீர் இல்லையெனவும் நோயார்களும் பிரதேச மக்களும் தெரிவிக்கின்றனர்.
மொறவெவ பிரதேசத்தின் அபிவிருத்திகள் தொடர்பாக பிரதேச செயலகத்தில் பல அபிவிருத்தி கூட்டங்கள் நடை பெற்று வருகின்ற போிலும் நோயாளர்களின் விடயத்தில் எவ்வித அதிகாரிகளும். அரசியல்வாதிகளும் அக்கறை காட்டுவதில்லையெனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தில் பாராளமன்ற உறுப்பினர்கள்.கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள். அமைச்சர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் தேர்தல் காலங்களில் மட்டும் கிராமத்திற்கு வருகை தருவதுடன் வைத்தியசாலை அபிவிருத்திகள் குறித்து பார்ப்பதற்காக வரவில்லையெனவும் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்துடன் மொறவெவ பிரதேச சபை உறுப்பினரொருவர் அவ்வைத்தியசாலையில் கடமையாற்றி வருவதாகவும் அவர் கூட நோயாளர்களுக்கு குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் இல்லையென தெரிந்திருந்தும் எதுவித நடவடிக்கையும் செய்யவில்லையெனவும் குறிப்பிடுகின்றனர்.
எனவே நோயாளர்களின் விடயத்தில் அக்கறை கொண்டுள்ளவர்கள் குடிப்பதற்கும் மாத்திரைகளை போடுவதற்குமாவது சுத்தமான குடிநீரை வழங்க உதவிகளை செய்ய வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.