நோட்டன் பிரிட்ஜ் நிரூபர் மு.இராமச்சந்திரன்-
இலங்கையின் சுவைமிக்க உணவுடன் ஆரோக்கியமிக்கதோர் சமூகத்தை உருவாக்கும் நோக்கில்" மத்திய மாகாண விவசாய திணைக்களத்தின் "ரம்பொட போசாக்கு உணவு நிலையம்" திறந்து வைக்கப்பட்டது.
மத்திய மாகாண விவசாய , இந்து கலாசார , தோட்ட உட்கட்டமைப்பு ,மீன்பிடி, சுற்றாடல் விவகார அமைச்சர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசோக்க ஹேரத் , கம்பளை பிரதேச சபை உறுப்பினர் செல்லமுத்து , மத்திய மாகாண அமைச்சின் பிரதான செயலாளர், மத்திய மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் , கொத்மலை பிரதேச சபையின் செயலாளர், கொத்மலை பிரதேச சபை உறுப்பினர்கள், விவசாய திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பொது மக்கள் என பலரும் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.