சம்மாந்துறை ஆடைத் தொழிற்சாலைக்கு கிழக்கு முதலமைச்சர் திடீர் விஜயம்..!

கிழக்கு முதலமைச்சரின் யோசனைக்கமைய சம்மாந்துறையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஆடைத் தொழிற்சாலையின் நிர்மாணப்பணிகளை பார்வையிட கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். இதன் போது ஒப்பந்தக்காரர்களையும் சந்தித்த கிழக்கு முதலமைச்சர் அதன் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறும் பணிப்பரை விடுத்தார்.

கிழக்கிலிருந்து பெண்கள் வௌிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லக் கூடாது என்ற தமது கொள்கைக்கு அமைய பெண்களுக்கு உள்நாட்டிலேயே தொழில்வாய்ப்புக்களை வழங்கும் வகையில் கிழக்கு முதலமைச்சர் ஆடைத் தொழிற்சாலைகளை கிழக்கில் நிர்மாணிக்கும் திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்.

இதனடிப்படையில் ஏறாவூரில் ஒரு ஆடைத்தொழிற்சாலை திறக்கப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை சீதன வௌி மற்றும் சம்மாந்துறையில் ஏனைய ஆடைத்தொழிற்சாலைகள் நிர்மாணழக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -