கிழக்கு மாகாண அரசியலில் பல சேவைகள், அபிவிருத்திகள், வேலை வாய்ப்புக்கள் என பல துறைகளிலும் முன்னெடுப்புக்களை செய்து காட்டி மக்கள் மனங்களில் இடம் பிடித்துள்ள முன்னாள் அமைச்சர் ஏ.எல்,எம்,அதாவுல்லாஹ் மற்றும் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ் போன்றவர்களை விமர்சிப்பதற்கு மாகாண சபை உறுப்பினர் தவத்திற்கு எந்த அருகதையும் இல்லை என நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் அல்-ஹாஜ் உதுமான்கண்டு நாபீர் தெரிவிக்கின்றார்.
தொடர்ந்து தனது கருத்தினை தெரிவித்த நாபீர் பெளண்டேசனின் தலைவர்.. கிழக்கின் அரசியல் தலைமை என எடுத்து கொண்டால் பெரும் தலைவர் அஸ்ஸஹீட் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களுக்கு பின்னால் கிழக்கிலே பல அபிவிருத்திகளை முன்னெடுத்து அதனை செயல்வடில் செய்து காட்டி கிழக்கில் மட்டு மல்லாது தேசிய அரசியலில் கூட இடம் பிடித்துள்ள அதாவுல்லாஹ் மற்றும் ஹிஸ்புழ்ழாஹ் போன்றவர்களை மாற்று கட்சிக்காரர்களும், அவர்கள் மீது அரசியல் காற்புணர்ச்சி கொண்ட அரசியல் புல்லுருவிகளும் விமசனம் செய்வதனை ஒரு பொழுதும் கிழக்கு மாகாண மக்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை என்பதனை அரசியலில் இவர்கள் அறிய மடமைகளாக விமர்சிக்கின்றார்கள் என்பது கவலைஅளிக்க கூடிய விடயமாக இருக்கின்றது.
அதாவுல்லாஹ், ஹிஸ்புல்லாஹ் என்னும் இரண்டு அரசியல் சக்திகள் மீது காலத்திற்கு காலம் மாற்று அரசியல் கட்சிக்காரர்களினால் சேறு பூசுவதென்பது அவர்களுக்கு தூக்கம் வரதார விடயமாகவே இருந்து வருகின்றது. மிக முக்கியமாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினாலோ அல்லது மாகாண சபை உறுப்பினர் தவத்தினாலோ குறிப்பிட்ட இரண்டு அரசியல் தலைமைகளையும் விமர்சிக்கவோ அல்லது அவர்கள் மீது சேறு பூசுகின்ற அரசியலினை மேற்கொள்வதனையோ ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாத அதே இடத்தில் அவ்வாறு அவர்கள் தொடர்ந் தேர்ச்சியாக செயற்படுவதனை நாபீர் பெளண்டேசன் வன்மையாக கண்டிப்பதாக தனது அறிக்கையில் மேலும் தெரித்தார் பெளண்டேசைன் இஸ்தாபக தலைவர் அல்-ஹாஜ் நாபீர்