எம்.ஜே.எம்.சஜீத்-
இறக்காமம் மாயக்கல் விவகாரம் தொடர்பாகவும் கிழக்கின்பூர்வீக நிலங்களை பாதுகாத்தல் தொடர்பாகவும் சட்டரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு கிழக்குமக்களின் இருப்பை நிறுவுவதற்கு கிழக்கு மக்கள் அவையம் கிழக்கின் புத்திஜீவிகளினதும் ஒத்துழைப்பை நாடி நிற்கிறது.
அதில் ஒரு கட்டமாக முதலில் அம்பாறை மாவட்ட சிரேஷ்டமற்றும் இளைய சட்டத்தரணிகள் அனைவரினதும் புலமைசார் பங்களிப்பினை கிழக்கு மக்கள் அவையம் கோருகிறது.
இனங்களுக்கிடையில் திட்டமிட்டு உருவாக்கப்படும் மோதல்களை தொலை நோக்குப்பார்வையோடு வெறும் உணர்ச்சிகளுக்கு மாத்திரம் அடிமையாகமல் அறிவுபூர்வமாக எதிர்கொள்வதற்கு சட்டத்தரணிகளின் வழிகாட்டல் அவசியமாகிறது.
கிழக்கு மக்கள் அவையத்தின் ஒன்றுகூடல் இம்மாத இறுதியில்நடைபெற இருப்பதால் மாயக்கல் விவகாரம் தொடர்பாகவும் அவையம் வாதிக்க எண்ணியுள்ளது.
எனவே ஆர்வமுள்ள அம்பாறை மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் கிழக்கு மக்கள் அவையத்தை தொடர்பு கொள்ளுமாறு வினயமாய் வேண்டுகிறோம்.
பஹ்ஜீ சட்டத்தரணி - 0773178783