க.கிஷாந்தன்-
அட்டன் நகரின் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் 24.04.2017 அன்று மட்டுமே எரிபொருள் வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அங்கு மக்கள் கூட்டம் நிரம்பி இருக்கின்றனர்.
நள்ளிரவு முதல் பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதனால் அட்டன் நகரில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் கூட்டம் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை எரிபொருள் தாங்கித் தொகுதி மற்றும் சீனக்குடா எரிபொருள் தொகுதி ஆகியன இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட வேண்டும்.
அவற்றுடன், சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயப்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் இந்தப் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
எவ்வாறயினும், மலையகத்தில் அநேகமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருட்ளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் திருப்பி அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.