கிண்ணியா டிப்போக்ளின் குறைபாடுகள் நிவர்திசெய்யப்பட வேண்டும் - இம்ரான் எம் பி

ஊடகப்பிரிவு-
கிண்ணியா மூதூர் கந்தளாய் பஸ் டிப்போக்ளின் குறைபாடுகள் நிவர்திசெய்யப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார் இன்றைய ( செவ்வாய்கிழமை) பாராளுமன்ற அமர்வின் போக்குவரத்து அமைச்சின் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்

அரசு மக்களுக்கு வழங்கும் சேவைகளுள் போக்குவரத்தும் முக்கியமானது. சாதாரண பொதுமக்கள் மட்டுமன்றி அரச தனியார் உத்தியோகத்தர்களும் கூட தமது கடமைகளுக்குச் செல்வதற்கு பொதுப் போக்குவரத்துச் சேவை உதவி புரிகின்றது.

1977 இல் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி பீடமேறியதன் பின்னர் திறந்த பொருளாதாரக் கொள்கை நாட்டில் அமுல் படுத்தப்பட்டது. இதன் விளைவாக தனியார் போக்குவரத்துத் துறை உதயமானது. இதன் மூலம் பொதுமக்களுக்கு பல நன்மைகள் ஏற்பட்ட போதிலும் சில பாதகங்களும் ஏற்பட்டு வருகின்றன. எனவே அவை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

தனியார் போக்குவரத்துத் துறையினரிடம் உள்ள போட்டி நிலைமைää அனுமதிப் பத்திரமில்லா சேவைகட்டுப்படுத்த முடியாத வேகம் போன்றன மூலம் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கும் நிலை உள்ளது.

எனவேää இந்தச் சேவையை காலத்துக்கேற்ப மேம்படுத்துவதற்குத் தேவையான புதிய சட்ட ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் வீதிகளில் உள்ள போக்குவரத்து நெருக்கடிகளையும் தவிர்ப்பதற்கு வழி செய்ய முடியும். பொதுமக்களுக்கு சிறந்த சேவையையும் வழங்க முடியும்.

கிண்ணியா உப பஸ் டிப்போ கடந்த 1994 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அப்போது இராஜாங்க அமைச்சராக இருந்த எனது தந்தை மர்ஹ_ம் எம்.ஈ.எச்.மகரூப் அவர்களின் அழைப்பின் பேரில் அப்போதைய ஜனாதிபதி டி.பீ.விஜேதுங்க அவர்களால் இந்த உப டிப்போ திறந்து வைக்கப்பட்டது.

மூதூர் டிப்போவின் 2 பஸ் வண்டிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த உப டிப்போவில் இப்போது பஸ்வண்டிகள் அதிகரித்துள்ளன. இதனால் சேவைகளும் வருமானமும் அதிகரித்துள்ளன. ஆனால் இன்னும் தனியான டிப்போ அந்தஸ்துக்கு இது வரவில்லை.

கௌரவ அமைச்சர் அவர்கள் இந்த டிப்போவுக்கு நேரடியாக விஜயம் செய்துள்ளதால் இதன் நிலைமைகள் அமைச்சர் அவர்களுக்கு நன்கு தெரியும். எனவே கிண்ணியாவை தனி டிப்போவாகத் தரமுயர்த்தி தேவையான வசதிகளைப் பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கிண்ணியாவுக்கு பஸ் ஸ்டாண்ட் நிர்மாணத்திற்காக கடந்த ஆண்டு கௌரவ அமைச்சர் அவர்கள் தலைமையில் அடிக்கல் நடப்பட்டது. இதன் கட்டட நிர்மாணப்பணிகள் நிறைவுற்ற போதிலும் இன்னும் இது பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட வில்லை. எனவே, இது விடயத்தில் அமைச்சர் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

திருகோணமலை பஸ்டிப்போ நீண்ட கால வரலாற்றை உடையது. எனினும் இங்கு பல்வேறு பற்றாக்குறைகள் உள்ளன. இதனால் திருப்தியான சேவையை வழங்குவதில் இந்த டிப்போ நிர்வாகம் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றது. கௌரவ அமைச்சர் அவர்கள் இவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோல மூதூர்,கந்தளாய் டிப்போக்களில் உள்ள குறைபாடுகளையும் நிவர்த்திக்க வேண்டும்.

திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் சேவையில் ஈடுபடுகின்ற சில தனியார் பஸ் வண்டிகள் பயணத்திற்காக அதிக நேரத்தை எடுப்பதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த வீதிகளில் நிறுத்தப்பட்டிருக்கின்ற நேரக்காப்பாளர்கள் இந்த விடயத்தைக் கவனத்தில் கொள்வதாக தெரியவில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகின்றது. இந்த விடயமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

கிண்ணியாப் பாலம் திறந்து வைக்கப்படும் வரை திருகோணமலையில் இருந்து கிண்ணியாவுக்கு தனியான பஸ் சேவை இருந்தது. ஆனால் பாலம் திறந்த பின் இந்தச் சேவை நிறுத்தப்பட்டு திருகோணமலை - மூதூர் என்ற சேவை ஆரம்பிக்கப் பட்டுள்ளது. 

இதனால் மூதூரில் இருந்து வரும் பஸ்ஸின் மூலம் கிண்ணியாப் பயணிகள் பயணஞ் செய்ய வேண்டியுள்ளது. சில வேளை ஆசனம் பெற்றுக் கொள்வதிலும் கிண்ணியா மக்களால் சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றது. எவே கிண்ணியாவுக்கென பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

கல்முனை – யாழ்ப்பாணம் பஸ்வண்டிகள் தற்போது பொலன்னறுவ - ஹபரனை- அநுராதபுரம் ஊடாகவே பயணஞ் செய்கின்றன. இவற்றில் சில பஸ் வண்டிகளை வாகரை – திருகோணமலை ஊடாக யாழ்ப்பாணம் செல்வதற்கேற்ற வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். இது தூரத்தில் பெரிய மாற்றம் எதனையும் ஏற்படுத்தப் போவதில்லை.

இதன் மூலம் வாகரை,வெருகல் ,சேருவில போன்ற பகுதி மக்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா போன்ற நகரங்களுக்குச் செல்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் குறைக்க முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -