அம்பாறை மாவட்டத்தை சார்ந்த வேலையில்லா பட்டதாரிகள் காரைதீவிலுள்ள பட்டதாரிகள் போராட்ட கூடாரத்தின் போராட்டத்தில் இடுபட்டு கொண்டு இருந்த போது அவ் இடத்தில் தீடிர் விஜயம் ஒன்றை இன்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மாற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களும் அவர்களுடன் ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் றிஸ்கான் முகம்மட் அவர்களும் மேற்கொண்டு இருந்தனர்.
அங்கு உள்ள வேலையில்லா பட்டத்தாரிகளின் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்பட்த்துடன் அங்கு உள்ள பட்டத்தாரிகளிடம் மேற்கொண்டு கூறினார் நான் உங்களை சந்தித்து புகைப்படம் எடுக்க,தனிப்பட்ட அரசியல் தேவைக்கு இங்கு வரவில்லை உங்களுடைய பிரச்சினை நேரில் பார்வை இட்டு அமைச்சராவை மாற்றும் பேச வேண்டிய இடத்தில் பேசவோ இங்கு வந்து இருக்குறேன் என சகல பிரச்சினைகள் பற்றியும் கலந்துரையாடினார்.