தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் வியட்நாம் நோக்கி இன்றிரவு பயணமானார். தற்போது ஜப்பான் பயணத்தில் இருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியா சென்று அங்கிருந்து வியட்நாமிம் செல்ல உள்ளார்.
வியட்நாமில் உத்தியோகப்பூர்வ பயணத்தை, ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கும் பிரதமரின் தூதுக்குழுவில், அமைச்சர் மனோ கணேசனும் இணைந்து கொள்வார். அதேபோல் வியட்நாமில் இருந்து நாடு திரும்பும் வழியில் மலேசியா சென்று அங்கு வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளிலும், அமைச்சர் மனோ கணேசன் கலந்துக்கொள்ள உள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் முஹமத் முசாம்மில் முன்னெடுத்துள்ளார் என ஜனநாயக மக்கள் முன்னணி ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.