அம்பாறை: போட்டி மேடையில் கண்கலங்கினார் கிழக்கு முதலமைச்சர்

குர்ஆனை மனனம் செய்தவர் என்ற பாக்கியத்தின் மூலம் அல்லாஹ் தமக்கு தந்துள்ள அந்தஸ்த்துக்கும் பதவிக்கும் தாம் என்றும் அதற்கு நன்றியுள்ளவராக இருக்க கடமைப்பட்டுள்ளதாக கிழக்கு மாாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்,

தனக்கு அல்லாஹ் வழங்கியுள்ள இந்த வாழ்வின் ஊடாக ஏனைய ஹாபிழ்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டிய தேவையும்கடமையும் தமக்குள்ளதாகவும் முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்.

கிழக்கு முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட்டின் முயற்சியினாலும் அனுசரணையாலும் நிந்தவூர் அல் மஸ்ஹர் பெண்கள் பாடசாலையில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட ஹாபிழ்களுக்கான மன்னப்போட்டி நிகழ்ச்சிகளின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார் .

குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கு அன்றைய சமூகத்தில் மக்கள் அளித்த மரியாதையை கண்ணியத்தை இன்றைய சமூகத்தில் காணக்கிடைப்பது அரிதாக உள்ளமை வேதனையளிபபதாக உள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்,

இன்று பல ஹாபிழ்களுக்கு தொழில்வாய்யப்புக்களுக்கும் சிரமப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளமை வேதனையளிப்பதாகக் கூறி கிழக்கு முதலமைச்சர் போட்டி மேடையில் கண்கலங்கினார்,

எனவே ஹாபிழ்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவை தமக்குள்ளதுடன் அதற்கான முழு அர்ப்பணிப்பையும் தாம் முன்னெடுப்பதாக கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்,

அத்துடன் தாம் கிழக்கு மாகாண ஹாபிழ்களுக்கான மனனப் போட்டியொன்றை ஏற்பாடு செய்துள்ளதை கேள்வியுற்று வௌி மாகாணங்களிலுள்ள ஹாபிழ்களும் தமது மாகாணங்களிலும் அவ்வாறான போட்டிகளை நடத்துமாறு கோரி வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்,

கிழக்கு முதலமைச்சர் கிழக்கு மாகாணத்தின் முதலாவது ஹாபிஸ் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். கிழக்கு மாகாண ஹாபிழ்களுக்கான மாபெரும் மாநாட்டையொட்டி நடைபெறும் அம்பாறை மாவட்ட ஹாபிழ்களுக்கான குர்ஆன் மனனப் போட்டி நிகழ்வில் ஏராளமான ஹாபிழ்கள் பங்கேற்றதுடன் அவர்களுக்கான போட்டிகள் பிற்பகல் வரை தொடர்ந்த்து,

இதில் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த ஹாபிழ்கள் பங்கேற்று தமது குர் ஆன் ஒதும் ஆற்றலை வெ ளிப்படுத்தி நின்றனர.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -