மக்கள் நலன்கருதி அல்-மஜ்மா நகர் கிராமத்தில் குண்றும் குழியுமாக காணப்பட்ட வீதிகளுக்கு தீர்வு



எம்.ரீ. ஹைதர் அலி-

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட 210B-காகித நகர் கிராம சேவையாளர் பிரிவின் அல்-மஜ்மா நகர் கிராமத்தில் வாழும் மக்கள் மற்றும் பயிர்ச்செய்கையாளர்கள் பயன்படுத்தும் ஏழு வீதிகள் மிகவும் பழுதடைந்த நிலையில் குண்றும், குழியுமாக காணப்படுவதாகவும், இதனால் இவ்வீதியினை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும் இதனை புனர்நிர்மானம் செய்து தருமாறு அல்-மஜ்மா நகர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கிடம் வேண்டுகோள் ஒன்றினை விடுத்திருந்தனர்.

அதற்கமைவாக அல்-மஜ்மா நகர் கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மஸ்ஜித் அல்-மஜ்மா பள்ளிவாயல் நிருவாக சபை ஆகியோரின் அழைப்பின்பேரில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் செயலாளருடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் 2017.02.06ஆந்திகதி-திங்கட்கிழமை இக்கிராமத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளை கண்டறிந்ததோடு, இங்குள்ள மக்களின் நலன்கருதி குண்றும் குழியுமாக காணப்பட்ட வீதிகளை சமப்படுத்தி புனர்நிர்மானம் செய்து வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச சபை செயலாளருக்கு பணிப்பரை விடுத்திருந்தார்.


அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இவ்வீதிகளை புனர்நிர்மானம் செய்வதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்றன. இருந்தபோதிலும் இப்புனரமைப்பு பணியினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் ஆரம்பித்து வைக்க வேண்டுமென கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் கேட்டுக் கொண்டதற்கினங்க 2017.04.18ஆந்திகதி-செவ்வாய்க்கிழமை (இன்று) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஆரம்பித்து வைத்தார்.

மேலும் பொதுமக்களின் நலன்கருதி துரித கதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வினை பெற்றுக்கொடுத்தமைக்காக பொதுமக்கள் சார்பாக அல்-மஜ்மா நகர் கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மஸ்ஜித் அல்-மஜ்மா பள்ளிவாயல் என்பன கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மற்றும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் செயலாளர் ஜே. சர்வேஸ்வரன் ஆகியோருக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக். கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் செயலாளர் ஜே. சர்வேஸ்வரன், மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் எம்.ரீ. ஹைதர் அலி, அல்-மஜ்மா நகர் கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மஸ்ஜித் அல்-மஜ்மா பள்ளிவாயல் நிருவாக சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -