எம் எம்.ஜபீர்-
காத்தான்குடியை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசிப்பவருமான செய்யத் அரூஸ் செரீப்டீன் கன்பரா பல்கலைகலைக்கழத்தில் தனது கலாநிதி பட்டத்தை அண்மையில் கன்பரா பாராளுமன்ற கேட்போர் கூடத்தில் வைத்து பெற்றுக்கொண்டார்.இவருக்கான பட்டத்தை பல்கலைக்கழகத்தின் பிரதி உப வேந்தர் பேராசிரியர் சாரா ரைன் வழங்கி வைத்தார்.
இலங்கை மற்றும் சர்வதேச ரீதியில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் கலாநிதி அரூஸ் என்பது குறிப்பிடத்தக்கது.இலங்கையின் கிண்ணியாவில் அண்மையில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவிகளை வழங்கினார்.
இவர் பேருவளை ஜாமியா நளீமியாவின் பழைய மாணவருமாவார்.கணனி முகாமைத்துவத்திலேயே இவர் கலாநிதி பட்டம் பெற்றமை விசேட அம்சமாகும்.