சிறையில் விதிமீறிய சசிகலா..

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரனை கடந்த பிப்ரவரி 16 முதல் மார்ச் 18ம் தேதி வரை சந்தித்தவர்களின் விவரங்களை அளிக்கும்படி தகவல் அறியும் உரிமை ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி சிறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்தார். இவரது விண்ணப்பத்துக்கு பதிலளித்துள்ள சிறை அதிகாரிகள், இளவரசி, சுதாகரன் ஆகியோர் மாதத்தில் 4 முறை பார்வையாளர்களை சந்தித்துள்ளதாகவும், சசிகலாவை அவரது வக்கீல், மருமகன் டிடிவி தினகரன், விவேக், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் சந்தித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

கர்நாடக சிறை விதிகளின்படி விசாரணை கைதிகள் வாரத்துக்கு ஒரு முறை அவர்களது உறவினர்கள், நண்பர்களை சந்திக்கலாம். தண்டனை கைதிகள் 15 நாட்களுக்கு ஒரு முறை சந்திக்கலாம். ஆனால் சசிகலா சிறை விதிகளை மீறி மாதத்துக்கு 12 முறை வக்கீல் மற்றும் உறவினர்கள், கட்சிக்காரர்களை சந்தித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் கைதிகளை சந்திக்கும் விதிகளை தளர்த்தும் அதிகாரம் சிறை அதிகாரிக்கு இருப்பதாகவும் சிறை வட்டாரம் மூலம் தெரியவருகிறது.(தி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -