வில்பத்து வர்த்தமானி விவகாரம் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடான சந்திப்பொன்றை தேசிய ஷூரா சபை இன்று மாலை 5 மணிக்கு கொழும்பில் நடத்தவுள்ளது.
இச்சந்திப்பில் வில்பத்து விவகாரம் தொடர்பில் தீர்க்கமான முடிவைப் பெற்றுக்கொள்வது பற்றி மிகுந்த அவதானம் செலுத்தப்படவுள்ளது. இக்கூட்டதில் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள், துறைசார் நிபுணர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது வட மாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் முதல் புதிய வர்தமானி அறிவித்தல் வரையான காலப்பகுயில் “முஸ்லிம்களின் மீள் குடியேற்ற உரிமை மறுக்கப்பட்டுள்ள விதம்” தொடர்பான தொகுப்பினை பேராசியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் முன்வைக்கவுள்ளார். அத்துடன் “சட்ட வரையறைக்குள் குறித்த வர்த்தமானி அறிவித்தலை எதிர்கொள்ள முடியுமான உத்திகள்” பற்றி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தெளிவூட்டவுள்ளார்.
இதேவேளை வில்பத்து வர்த்தமானி விவகாரம் தொடர்பில் காலதாமதம் ஏற்படுத்தி அதனை மழுங்கடிக்கும் நிலையைத் தவிர்ப்பதனை அடிப்படையாக்கொண்டு குறித்த விடயத்தில் உடனடித் தீர்வு முன்வைத்து அப்பிரதேச மக்களின் காணிகளையும் அவர்களின் மீள்குடியேற்றத்தையும் உறுதிசெய்வதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஓரணியாக நின்று செயற்படுவதற்கும் அழுத்தம் கொடுக்கப்படவுள்ளது என தேசிய ஷூரா சபை தெரிவித்துள்ளது.