எச்.எம்.எம்.பர்ஸான்-
கடந்த பாராளுமன்றத்தேர்தலில் சொற்ப வாக்குகளால் தோக்கடிக்கப்பட்ட நான் தற்போது அமைச்சராகவுள்ளேன். நான் இனி அரசியலை விட்டு ஒதுங்குவோம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
அன்று அதிகாலையில் எனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தது. நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் பெயரோடு தான் தேசியப்பட்டியல் போகும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் தப்போதய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர்கள் என்னிடம் தொலைபேசியூடாகக் கூறினார்கள் என்று அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கூறினார்.
அமைச்சர் ஹிஸ்புல்லாவின் 25 வருட கால அரசியல் பதிவுகளை வெளிக்காட்டும் ‘கிழக்கு வாசல்’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
நாம் அரசியலில் இன்று விமர்சிக்கப்படுகின்றோம் என்பதற்காக அல்லது ஏசப்படுகின்றோம் என்பதற்காக சமூகத்தக்குச் செய்ய வேண்டிய விடயங்களில் ஒரு போதும் பின் நிற்கக்கூடாது. நம்மால் முடிந்த வரையில் சமூகத்துக்கு பல விடயங்களைச் செய்ய வேண்டும் எனத்தெரிவித்தார்.