பறஹகதெனிய தேசிய பாடசாலையின் விஞ்ஞான கற்கை நெறிப் பிரிவினரின் ஏற்பாட்டில் வருடாந்த விழா 15-4-2017 சனிக்கிழமை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் 8.00 மணி அளவில் அதிபர் ஏ. எம். எம். சபருல்லாஹ்கான் தலைமையில் இடம்பெறவுள்ளதாக என்று விஞ்ஞான கற்கை நெறிப் பிரிவினரின் பொறுப்பாசிரியர் ஏ. சீ. எம். ஹபீழ் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்
இந்நிகழ்வில் விசேட அதிதியாக் இப்பாகமுவ கல்வி வலய தமிழ் பிரிவிக் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ் எம். இம்ரான் குருநாகல் கல்வி வலய தமிழ் மொழிப் பிரிவின் இணைப்பதிகாரி அஜ்வாத் மற்றும் முன்னாள் மாவத்தகம பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் முஹமட் ரிபாழ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதில் க. பொ த. சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சையில். சித்தியடைந்த மாணவர் மாணவிகள் கௌரவிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்..