க.கிஷாந்தன்-
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எலிபடை தோட்ட மைதானத்திற்கு அருகாமையில் ஈர நிலப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வதற்காக தோண்டப்பட்டுள்ள பாரிய குழிகளினால் இயற்கை வளம் பாதிப்படைந்து வருகின்றது.
இவ் ஈர நில பகுதியின் மேற்புரத்தில் சமீபமாக குழாய் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ப்படுகின்றது. இந்த சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வினால் எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடும் நிலவகூடிய வாய்ப்புள்ளது.
குறித்த பகுதியில் மாணிக்ககல் அகழ்வதற்காக பாரிய நிலப்பரப்பில் குழிகள் ஏற்படுவதனால் அப்பகுதியில் மரங்கள், தேயிலை மரங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றது.
உள்ளுர் மற்றும் வெளியிட பிரதேசவாசிகளினால் இப்பகுதியில் மாணிக்ககல் அகழ்வுக்காக இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தோட்ட தொழிலாளர்களுக்கு தொழிலும் பாதிக்கப்பட்டு வருகின்றது.
மிக நீண்டகாலமாக இப்பிரதேசத்தில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதேவேளை இது தொடர்பில் சமமந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.