எமது வன வளங்களை அழித்து நாசப்படுத்தும் பதியுதீனை உடனடியாக கைது செய்.
பதியுதீனின் சூழல் பயங்கரவாதத்துக்கு எதிராக இலங்கை வாழ் பிரஜைகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்..!!! கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட எமது நடவடிக்கைகளினால், பதியுதீனின் குடும்ப நிறுவனத்துக்கு வில்பத்துவில் வீடுகளை நிர்மாணிக்க முடியாத நிலை!
புத்தாண்டு வாரத்தில் வன பாதுகாப்பு அதிகாரிகள் விடுமுறையில் சென்றவுடன் வில்பத்து, தப்போவ, வீரக்குளிச்சோலை மற்றும் கல்லாறு வனப் பிரதேசங்களில் மரங்களை வெட்டுவதற்கு பாரிய திட்டம்! இதில் வன பாதுகாப்பு அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளனர்.
இனவாத நோக்குடன் அமைச்சர் றிசாத்திற்கு எதிராக வில்பத்துவை பாதுகாப்போம் என்ற ஆனந்த தேரரின் அமைப்பு தீவிர பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் சில சிங்கள சார்பு சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்களும் தகவல்களுமே இவை.