ஆளுமை என்பதாலேயே அடக்க நினைத்த ஊடகங்கள்..!

றைந்த மாமனிதர் பாசறையில் பயிற்றப்பட்டு அன்னாருடைய கொள்கைகளை தனது கொள்கையாக்கி முஸ்லிம்களுக்குகாக நெஞ்சை நிமிர்த்திப் பேசிய தலைமைத்துவமே அதாவுல்லாஹ். அன்றைய கால விடுதலைப்புலிகளுக்கு வெட்டிக்கொடுத்தால் உப்பில்லாமல் சப்பிச் சாப்பிடும் அளவுக்கு சவாலாக இருந்த ஒருவர்.

கிழக்கு பிரிய வேண்டும் என்று அடித்துக் கூறிய அதாவுல்லாவின் செயல்களும் செயற்பாடுகளும் அன்றைய பக்கச்சார்பான தமிழ் ஊடகங்கள் தூக்கிப்பிடியாமை காரணமாக என்னவோ கிழக்கு மக்கள் மனங்களில் இது வரை காலமும் அவர் தெளிவாக துலக்கப்படவில்லை என்பதே உண்மை. ஆனால் இன்று அவரின் தேவை மாற்றுக்கட்சியில் உள்ள பலராலும் உணரப்பட்டு அதற்கான சமிக்ஞைகளும் காட்டப்பட்டு வருகிறது.

ரணில் ஆதரவு மேற்கத்தைய நோர்வேயிற்கும், இஷ்ரேலுக்கும் ,அமெரிக்காவுக்கும் ஒரு போதும் அடிபணியும் சக்தியாக அதாவுல்லா இரியாமையே , அன்று அவர்களின் கூட்டுசக்தியாகவிருந்த ஹக்கீமை ஊடகங்கள் உயர்த்திவிடவும் , பத்திரிகையை நம்பியிருந்த நமது மக்கள் ஹக்கீமை தலையில் வைத்துச் சுமக்கவும் ஏதுவாகம் அமைந்தது என்பது வரலாறு சொல்லும் பாடம். சுயமாக சிந்திப்போருக்கு இதில் சத்தியம் இருக்கிறது.

ஹக்கீம் சம்மந்தன் உறவும், ஹக்கீம் நோர்வே பரிமாற்றமும் என வரும் செய்திகளின் உண்மைத்தன்மையைப் பரீட்சித்துப் பார்க்கும் போது பல கேள்விகளுக்கான விடைகள் அங்கு பொதிந்து கிடப்பதனை நோக்கலாம். வடகிழக்கு இணைப்பு விவகாரம் மேலும் இதனை உறுதி படுத்தப் போடும் முடிச்சாகும்.

அன்பான நண்பர்களே! உங்கள் மனம் எனும் மந்திரச்சாவியினை திறந்து பரிசோதனை முயற்சியில் ஈடுபடுங்கள். கனியன் பூங்குன்றன் "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்கிறான். ஒவ்வொருவரும் அவரவர் செய்யும் செயலுக்கேற்ற பயனை அனுபவிப்பர் என்பதே பொருள். ஊடகங்களால் வளர்க்கப்பட்ட ஹக்கீமை இன்று அதே ஊடகங்கள் வளைத்து நின்று வீழ்த்தும் வரலாறு காண்கின்றோம். ஊடகங்களால் உச்சம் தொட்ட ஹக்கீம் இன்று ஊடகங்களாலேயே அழிவதனை காணக்கூடியதாக இருக்கின்றது. ஹக்கீமின் அதே தந்துரோபாயத்தை கடைப்பிடித்து ஊடக்கங்களால் வளர்ந்துவிட்ட ரிசாட்டுக்கும் இன்று இதே நிலைதான்.

அன்று அதாவுல்லா ஆளுமை என்பதனைக் கண்டுகொண்ட ஊடகங்கள் அவரைத் தாழ்த்தவும் தூற்றவும் திட்டமிட்டுத் தொழிற்பட்டன என்பதே உண்மை. தொடர்ந்த ஊடகங்களின் அடக்கு முறையே தொடர்ந்தும் ஒரு மனிதனின் மனச்சோர்வுக்கு வித்திட்டு அவரை சிலகாலம் விலங்கிட்டது என்று கூறுவதில் தப்பில்லை. ஆனால் ஒரே காலவோட்டம் ஒரே அதிகாரம் என்றும் நிலையில்லை என்பது போல சுழற்சிச் சக்கரம் இன்று மாறிச் சுழல்கிறது. காலம் உண்மைகளை உணர்த்தி நிற்கிறது.

ஊடகங்கள் வளர்ந்து விட்டன. சமூக வலைத்தளங்கள் சல்லடை போட்டுத் துலக்குகின்றன. அதிர்வும் , வெளிச்சமும் இன்று வீட்டில் குடிகொண்டு அனேகமானோரின் தேடல்களுக்கு தீர்வாக தீனி போடுகின்றன. உண்மைகள் உதயமாகி பரி விரைந்தோடும் காலம் கனிகிறது.

Shifaan Bm
மருதமுனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -