அக்கரைப்பற்றில் சதோச விற்பனை நிலையம் திறந்து வைப்பு..!

எம்.ஏ.றமீஸ்-
டந்த காலத்தில் நஷ்டத்தில் இயங்கி வந்த சதோச விற்பனை நிலையங்களை நான் இதற்குப் பொறுப்பான அமைச்சினைப் பொறுப்பேற்றதிலிருந்து தற்போது இலாபம் ஈட்டுகின்ற நிறுவனமாக அதனை மாற்றியமைத்திருக்கின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று நகரில் நிறுவப்பட்டுள்ள லங்கா சதோச விற்பனை நிலையத் திறப்பு விழா இன்று (09) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

கடந்த காலத்தில் சதேச நிறுவனம் மிகுந்த நஷ்டத்தில்இருந்து வந்தது. இந்நடைமுறையினை நிவர்த்தி செய்து இந்நிறுவனத்தினை இலாபமீட்டும் வகையில் மாற்றியமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டோம். அதற்கமைவாக துறைசார் நிறுவனங்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளுக்கமைவாக பல்வேறான மாற்றங்களை மேற்கொண்டோம். அதன் விளைவாக தற்போது இந்நிறுவனம் பாரிய இலாபமீட்டும் நிறுவனமாக மாறியிருக்கின்றது.

கடந்த காலங்களில் இயங்கிய வந்த சதோச நிறுவனத்தின் விற்பனை நிலையங்களை நாம் தற்போது அதிக எண்ணிக்கைகொண்டதாக விஸ்தரித்திருக்கின்றோம். அதுமட்டுமல்லாமல் நாட்டிலுள்ள அனைத்து சதோச விற்பனை நிலையங்களையும் ஒரே நேரத்தில் கண்காணிக்கக் கூடிய வகையில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கணணிமயப்படுத்தியிருக்கின்றோம். இதன் விளைவாக நாடு தழுவிய ரீதியில் உள்ள கிளைகளின் பிரச்சினைகளை குறிப்பிட்ட சில நிமிடங்களுக்குள் நிவர்த்தி செய்யக்கூடிய வழி வகைகள் ஏற்பட்டுள்ளன.

சதோச விற்பனை நிலையங்கள் மூலம் பல்வேறான நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடிவதனையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். மக்கள் கஷ்டப்பட்டு உழைக்கின்ற பணத்தினைக் கொண்டு பொருட்களை கொள்வனவு செய்கின்றபோது அதன்பால் பூரண திருப்த்தியடைய வேண்டும். அதற்கேற்றால்போல் குறைந்த விலையில் மக்கள் திருப்த்திப் படக்கூடிய ஏராழமான பொருட்களை இச்சத்தோச விற்பனை நிலையங்கள் மூலம் வழங்கி வருகின்றோம்.

தமிழ் சிங்கள புத்தாண்டையொட்டி சதோச நிறுவனத்தினால் சலுகை அடிப்படையில் பொருட்பொதிகள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை மக்கள் கொள்வனவு செய்து நன்மையடைய வேண்டும் என்னும் குறிக்கோளின் அடிப்படையிலேயே இவ்வாறான விடயங்களை நாம் நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

நாடளாவிய ரீதியில் உள்ள மக்கள் நலன் பெறும் வகையில் பல்வேறான அபிவிருத்திகளை நாம் மேற்கொண்டுவருகின்றோம். அதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் பல்துறை அபிவிருத்திகள், இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்பு மற்றும் இம்மாவட்டத்திலுள்ள கரும்புச் செய்கையாளர்களின் பிரச்சினை, நுரைச்சோலை வீட்டுத்திட்டம் உள்ளிட்ட மக்கள் எதிர்நோக்கும் பல்வேறான பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம் என்றார்.

இந்நிகழ்வினைத் தொடர்ந்து அண்மையில் இறக்காமம் வாங்காமம் பிரதேசத்தில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையினால் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கான தேவைகளை நிவர்த்திக்கும் வகையில் ஒருதொகைப் பணமும் வைத்தியசாலையின் அத்திட்சகர் டாக்டர் ஐ.எம்.ஜவாஹிரிடம் வழங்கி வைத்தார்.

இது தவிர இவ்வைத்தியசாலையின் சமையலறை மற்றும் இதர குறைபாடுகள் போன்றவற்றை நேரில் பார்வையிட்ட அமைச்சர் இவ்விடயம் தொடர்பில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடி விரைவில் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வாக்குறுதியளித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -