அமைச்சுப் பதவிகளை பாதுகாக்க, இவர்கள் படும் பாடு

நாளை மே முதலாம் திகதி உலக தொழிலாளர் தினமாகும்.ஆனால்,இலங்கை போன்ற நாடுகளில் இது அரசியல் கட்சிகளின் பலத்தை நிரூபிக்கும் தினமாகும்.

இலங்கையைப் பொறுத்தவரை இந்த அரசியல் பலத்தை நிரூபிக்கும் போட்டி சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் மஹிந்த அணிக்கும் ஏற்பட்டுள்ளது.

இரண்டு கட்சிகளுக்கும் இடையில்தான் பிரதான போட்டியே ஏற்பட்டுள்ளது.நாளை நாட்டு மக்கள் அனைவரினதும் பார்வையும் இந்த இரண்டு கட்சிகளின் மே தினக் கூட்டங்களின்மீதுதான் திரும்பவுள்ளது.

கண்டியில் இடம்பெறும் சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் அதிக மக்களை இறக்குவது தொடர்பில் சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ஓரிரு நாட்களுக்குமுன் கூடி ஆராய்ந்தது.

தங்களால் எத்தனை பேரைக் கூட்டி வரமுடியும் என்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட சுதந்திர கட்சி அமைச்சர்கள் ஒவ்வொருவரும் கூறினர்.

அந்த அடிப்படையில் நாடு பூராகவும் 3 ஆயிரம் பஸ்களில் மக்களை அழைத்துச் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.இதில் யார் அதிகமான மக்களை அழைத்துச் செல்வதென்று அமைச்சர்களுக்கிடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளதாம்.

குருநாகலில் இருந்து 75 பஸ்களில் மக்களை அழைத்துச் செல்வதற்கு அமைச்சர் தயாசிறி தயசேகர தீர்மானித்துள்ளார்.ஹம்பாந்தோட்டையில் இருந்து 160 பஸ்களை ஏற்பாடு செய்துள்ளார் அமைச்சர் மஹிந்த அமரவீர.

இதை அறிந்த ஏனைய அமைச்சர்கள் இந்த எண்ணிக்கையை விஞ்சிவிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்களாம்.இதற்கெல்லாம் ஒரேயொரு காரணம் விரைவில் அமைச்சரவை மாற்றம் ஏற்பட இருக்கின்றமைதானாம்.

அதிகமான மக்கள் கலந்துகொள்வதே ஜனாதிபதியின் தேவையாக இருப்பதால் அந்தத் தேவையை நிறைவேற்றி ஜனாதிபதியின் மனதில் இடம்பிடித்து இப்போது இருக்கின்ற அமைச்சுப் பதவிகள் பறிபோகாமல் பாதுகாத்துக்கொள்வதற்கான வியூகம்தான் இது என உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

[M.I.Mubarak-Senior Journalist]
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -