கிழக்கு மாகாண சபையில் உறுப்பினர் எம்.எஸ். சுபைர் தனி நபர் பிரேரணை

எஸ்.அஷ்ரப்கான்-

முசலிப் பிரதேசத்தின் சுமார் 28 ஆயிரம் மக்களின் வாழ்விடங்களை சுவீகரிக்கும் வகையிலான புதிய வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெற்று இரத்துச் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கிழக்கு மாகாண சபையில் தனிநபர் பிரேரனை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பான முழு அறிக்கை ஒன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் எம்.எஸ்.சுபைர் அனுப்பி வைத்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வில்பத்து சரணாலயம் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் கடந்த 2017.03.28 வெளிவந்ததன் மூலம் சுமார் 40030.525 ஹெக்டெயர் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இதனால் நிர்க்கதியாகியுள்ள மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதுடன் அவர்கள் வீதிக்கிறங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளமை பெரும் கவலை தரும் விடயமாகும்.

இவர்கள் கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற அநியாயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே புதிய நல்லாட்சி அரசாங்கத்தை ஒன்றிணைந்து கொண்டு வந்தனர். ஆனால் நல்லாட்சி அரசும் எமது வாழ்விடங்களையும், வாழ்வாதாரங்களையும் சூரையாடும் நிலையை தொடர்ந்தும் ஏற்றுக் கொள்ள முடியாதென்று வீதிக்கிறங்கிய நிலையில் பிரஸ்தாப மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதே வேளை மன்னார் மாவட்டத்தில் முஸலி பிரதேசத்தில் முள்ளிக்குளம் மற்றும் சிலாவத்துறை பிரதேசங்களில் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்ட மக்களின் தனியார்காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்பிரச்சினைகள் இன்று பெரும் பேசு பொருளாக மாறி வருகின்றது. எனவே இதற்கான உடனடித் தீர்வு பெறப்பட்டு நல்லாட்சி அரசில் மக்கள் துயர் துடைக்கப்பட வேண்டும் இதற்காக ஜனாதிபதியவர்கள் அதிக கவனம் எடுத்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இது தொடர்பான தனி நபர் பிரேரணை மாகாண சபை அமர்வில் சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைரினால் கொண்டு வரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -