மஹிந்த மாவீரனா...? இந்த கட்டுரையை பொறுமையாக வாசித்தால் விளங்கும்

ந்த கட்டுரையை பொறுமையாக வாசித்தால் உண்மை என்னவென்று விளங்கும், அப்படிவாசிக்காமலும், அதன் ஆழத்தை புரிந்துகொள்ளாமலும் எதிர் விமர்சனம் செய்பவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளவேண்டும்.
இதனை விமர்சிப்பவர்கள் ஒன்று ஐ.தே.கட்சி அருவருடிகளாக இருப்பார்கள், அல்லது கடந்த காலங்களை மறந்த மறதிக்காரர்களாக இருப்பார்கள் என்பதே உண்மையாகும்.

1986ம் ஆண்டுக்கு பிறகு வடகிழக்கிலே தமிழ் புலிகளினால் ஆயுதபோராட்டம் வழுப்பெற்று வந்தது, அந்த நேரத்தில் அவர்களுடைய போராட்டத்தை முஸ்லிம் மக்களும் ஆதரித்தே வந்தனர்.

அவர்களுடை ஆயுத அடக்குமுறை முஸ்லிம்களையும் நோக்கி பாயத்துவங்கியது, கப்பம் அறவிடுவது, முஸ்லிம் தனவந்தர்களை கடத்திக்கொண்டுபோய் மிரட்டி பணம் பறிப்பது, ஆங்காங்கே முஸ்லிம்களின் காணிகளை மிரட்டி பறிப்பது, அதனை தட்டிக்கேட்ட புத்திஜீவிகளை சுட்டுத்தள்ளியது, இப்படி இன்னோரன்ன துன்பங்களையும், துயரங்களையும் பாசிச ஆயுததாரிகள் நிகழ்த்தி வந்தார்கள்.

இவர்களுடைய இந்த அட்டகாசங்களை தமிழ் பொதுமக்கள் அங்கீகரிக்கவில்லை, இருந்தாலும் தட்டிக்கேட்கவும் அவர்களினால் முடியாமலும் இருந்தது. இந்த நிலையில்தான் முஸ்லிம்கள் தனி அரசியல் கட்சியை உருவாக்கி, அதன் மூலம் தமிழ் ஆயுததாரிகளின் அட்டகாசங்களை வெளியுலகுக்கு தெறிவிக்க முயன்றார்கள். அதனை பொறுத்துக்கொள்ள முடியாத ஆயுததாரிகள் முஸ்லிம்களின் மேல் கூடுதலான அநியாயங்களை கட்டவிழ்த்து விட தொடங்கினார்கள்.

இதன் தாக்கங்களாக, காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை, ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராம மக்கள் படுகொலை, அழிஞ்சிபொத்தானை மக்கள் கொலைசெய்யப்பட்டு விரட்டியடிக்கப்பட்டமை போன்ற இன்னும் பல அநியாயங்களையும் செய்துவந்தார்கள். இதனை தட்டிக்கேட்கவோ, தடுக்கவோ, கண்டிக்கவோ எந்த உலகநாடுகளோ, அல்லது இலங்கை அரசாங்கமோ கரிசனை காட்டியதாக தெறியவில்லை.
இந்த நேரத்தில்தான் 1990ம் ஆண்டு பிரமதாசா ஆட்சியின் போது பாசிச புலிகளினால் வடக்கு முஸ்லிம்கள் உடுத்த உடையோடு வெளியேற்றப்பட்டார்கள்.

இந்த விடயத்தை அன்று சிங்கள அரசாங்கம் கண்டும் காணாததுபோல் நடந்து கொண்டது. தமிழ் ஆயுத குழுக்களின் இப்படியான அட்டகாசங்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் அன்று முஸ்லிம்கள் கதறிய கதறல்கள் யார் காதிலும் விழுந்ததாக தெறியவில்லை. சிங்கள ஆட்சியாளர்கள் வடக்கு கிழக்கோடு பிரச்சினையை மட்டுப்படுத்திக்கொண்டு தென்பகுதிகளில் கம்முதாவ நடத்திக்கொண்டு, கண்ணை மூடிக்கொண்டு இருந்துவிட்டார்கள்.

அதன் பின் ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா அம்மையாரின் காலத்தில் முஸ்லிம் மக்களின் மீது புலிகள் செய்யும் அநியாயங்களை கண்டும் காணாதது போல் இருந்துவிட்டார். புலிகளோடு சமரசம் செய்வதித்தான் குறியாக இருந்தார்களே தவிர முஸ்லிம் மக்களின் துயரங்களை துடைப்பதற்கு அவர்கள் கவணத்தை செலுத்தவில்லை.

இந்த புலிகளின் அட்டகாசங்கள் அத்துமீறி சென்ற போது இவர்களை கூண்டோடு அழிப்பதற்கு யாரும் வரமாட்டார்களா.? என்று ஏங்கித்தவித்த காலங்களும் உண்டு. அந்த நேரத்தில் 2002ம் ஆண்டு பதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள் புலிகளோடு ஒப்பந்தம் செய்து கொண்டு முஸ்லிம் மக்களை சிறுகுழுக்கள் என்று குறிப்பிட்டு முஸ்லிம் சமூகத்தை புலிகளிடம் காட்டிக்கொடுத்தார்.

அந்த ஒப்பந்த காலத்தில் புலிகள் அதிகாரபூர்வமாக வீதிக்கு வந்து முஸ்லிம்களைத்தான் பழிவாங்கினார்கள். வாழைச்சேனையில் ராணுவமும், ஹக்கீமும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மைத்துக்களை நல்லடக்கம் செய்வதற்கு தூக்கிகொண்டு வரும்போது அவர்களின் கண்முன்னாலே அந்த மையத்துக்களை புலிகள் டயர் போட்டு பெற்றோல் ஊற்றி எறித்தார்கள்.

இது மட்டுமல்ல மூதூர், காத்தான்குடி, கல்முனை போன்ற பிரதேசங்களில், புலிகள் இலங்கை ராணுவம் பார்த்துக்கொண்டிருக்க பகிரங்கமாகவே முஸ்லிங்களுக்கும் அவர்களின் உடமைகளுக்கும் சேதத்தை விளைவித்தார்கள். ஒப்பந்தபடி முஸ்லிம்களை பாதுகாக்க எங்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்றுகூறி, அன்று எங்களுக்கு உதவி செய்வதற்கு ராணுவம் மறுத்துவிட்டது.

இந்த ஒப்பந்தத்தை செய்து புலிகளிடம் முஸ்லிம்களை காட்டிக்கொடுத்த ரணில் அவர்களை முஸ்லிம் சமூகம் மறக்குமாக இருந்தால் அது கவலைக்குறிய விடயமாகத்தான் கருதப்படும். இந்த அநியாயங்களை தட்டிக்கேட்பதற்கு கூட ரணில் அவர்கள் அன்று தயார் இல்லாத நிலையில்தான் இருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் புலி பசித்தால் புல்லையா திண்கும் என்று ஏளனமாக கூறியவர்களும் உண்டு.

இந்த நேரத்தில்தான் மஹிந்த ஆட்சிபீடம் ஏறினார், அவருடைய காலத்திலும் புலிகள் நரவேட்டை ஆடுவதை நிறுத்தவில்லை, மஹிந்த என்னத்தை பார்த்துக்கொண்டிருக்கின்றார் என்று பேசிய மக்களும் உண்டு. அந்த நேரத்தில்தான் மாவிலாறு அணைக்கட்டை புலிகள் அடைத்துவிடுகின்றார்கள், அவர்கள் அப்படி அணைக்கட்டை மூடியதனால் மூதூர் முஸ்லிம்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள், அதற்காக ஆர்ப்பாட்டமும் செய்தார்கள் இதனை கண்டு ஆத்திரமுற்ற பாசிச புலிகள் மூதூர் மக்களை ஊரை விட்டே துரத்தியடித்தார்கள்.

பல சொல்லொன்னா துயரங்களை அனுபவித்துக்கொண்டு காடு மேடு கடந்துவந்த மூதூர் மக்கள் பல ஊர்களுக்கும் சிதறி ஓடினார்கள். இந்த காட்சிகள் 1990ம் ஆண்டு வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட துயர நிகழ்ச்சியை யாபக படுத்தியது. மூதூர் முஸ்லிம்களை வெளியேற்றிய புலிகள் கிழக்கிலே உள்ள அத்தனை ஊர் முஸ்லிம்களையும் கூடிய சீக்கிரம் வெளியேற்றுவோம் என்றும் கர்ஜித்தனர். அந்த அரைகூவலை கண்டு எல்லா முஸ்லிம்களும் அன்று பயந்திருந்தனர்.

அந்த நேரத்தில் மஹிந்த ராஜபக்ஸ கந்தளாய் வருகின்றார், அங்கே அவர் முஸ்லிம் மக்களைப் பார்த்து கூறுகின்றார்.... முஸ்லிம்களே நீங்கள் பயப்படதேவையில்லை யாழ் முஸ்லிம்கள் வெளியேறியதை கண்டு கொள்ளாமல் விட்ட அரச தலைவர்களைப்போல் நான் இருக்கமாட்டேன், இன்றிலிருந்து யுத்தத்தை ஆரம்பிக்கின்றேன், மூதூர் முஸ்லிம்கள் எதிர்வரும் நோன்பை உங்கள் சொந்த ஊரில்தான் பிடிப்பீர்கள் என்று சூலுரைத்தார்.

அந்த மஹிந்த என்ற மாமனிதன் சொன்ன வாக்கை காப்பாற்றினார், அதுமட்டுமல்ல சம்பூரிலே இருக்கும் புலிகளையும் விரட்டியடித்துத் தாறுங்கள் அப்போதுதான் நாங்கள் மூதூரிலே நிம்மதியாக வாழமுடியும் என்று மூதூர் மக்கள் கேட்டபோது, அதனையும் மஹிந்த என்ற மாமனிதன் செய்து கொடுத்தார். அதனைத் தொடர்ந்து முஸ்லிம் நாடுகளின் உதவியோடு, மேற்குலக நாடுகளின் எதிர்ப்பையும் தாங்கிக்கொண்டு புலிகளை கூண்டோடு அழித்து, முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கு விடுதலையை வாங்கித்தந்தார்.

புலிகள் ஆயுதத்தோடு திரிந்த காலத்தில் தமிழ் மக்கள் ஒரு கழிவரை கட்டுவதென்றாலும் லஞ்சம் கொடுக்கவேண்டியிருந்தது, அதனால் அவர்கள் ஒரு வீடு கட்டுவதற்கு கூட பயந்திருந்தார்கள், இன்று வடகிழக்கில் பாருங்கள் சுதந்திரமாக எத்தனை வீடுகள், கடைகள் கட்டப்படுகின்றனவென்று. இவ்வளவு விடயத்தையும் செய்து விட்டு 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முஸ்லிம் மக்களிடம் வாக்கு கேட்டுவந்த மஹிந்த என்ற மாவீரனுக்கு கிழக்கு முஸ்லிம் மக்கள் ஏமாற்றத்தையே பரிசாக கொடுத்தனர்.

இப்படி முஸ்லிம் மக்கள் நடந்து கொண்டதற்கு முஸ்லிம் மக்கள் காரணமல்ல, மாறாக வெளிநாட்டு ஏஜண்டுகளிடமும், டயஸ் போராக்களிடமும் பணத்தை வாங்கிக்கொண்டு, சரத் பொன்சேகாவை கொண்டு வந்து அவருக்கு வாக்களியுங்கள் என்று கூறிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் சதித்திட்டத்தின் காரணமாகவே முஸ்லிம்கள் ஏமாந்து சரத்பொன்சேகாவுக்கு வாக்களித்தார்கள்.

மஹிந்த என்ற மனிதன் அன்று வெளிநாடுகளுக்கு பயந்து புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது விட்டிருந்தால், இன்று வடகிழக்கிலே வாழும் முஸ்லிம்கள் புலிகளிடம் அடிமைகளாக ஆக்கப்பட்டிருப்பார்கள். இந்த புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் மஹிந்தவுக்கு பக்கபலமாக இருந்த ஓரே ஒரு முஸ்லிம் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா மாத்திரமே. மற்ற எந்த முஸ்லிம் தலைவர்களும் இதற்கு முன்வரவில்லை.

முஸ்லிம்களுக்கு பாதகமாக இருந்த வடக்கு கிழக்கு இணைப்பை பிரித்துத் தந்ததும், புலிகளை அடக்கித் தந்தவருமான மஹிந்த ராஜபக்சவை நாம் மறக்கமுடியாது. அதே நேரம் சிங்கள இனவாதிகளை அவர் அடக்கத்தவரினார் என்பது உண்மைதான், அதனை நாம் ஆதரிக்கவோ, சரிகானவோ முடியாது.
அந்த இனவாதிகளின் கொட்டத்தை அடக்குமாறு நாம் எவ்வளவோ வேண்டி நின்றோம், அதற்கு சம்பிக்கவின் கதையைத்தான் நம்பினாரே தவிர எமது கோரிக்கையை நிராகரித்திருந்தார்.

இருந்தாலும், தர்கா நகர் பிரச்சினை நடக்கும் போது மஹிந்த, கோத்தா போன்றோர் நாட்டில் இருக்கவில்லை, அந்த நேரம் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த இன்றய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் நினைத்திருந்தால் அந்த பிரச்சினையை உடனே அடக்கியிருக்கலாம், ராஜித சேனாரத்தின போன்றோர் நீழிக்கண்ணீர் வடிப்பதை போல் நாடகமாடினார்களே தவிர அந்த கலவரத்தை அடக்குவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

அன்று தர்கா நகர் பிரச்சினையை தூண்டிவிட்ட ஞானசார அவர்களும், அதற்கு உடந்தையாக இருந்த சம்பிக்க ரணவக்க போன்றோரும், அந்த நேரம் முஸ்லிம்கள் அடிவாங்குவதை கண்டு பரிதாபப்படுவதைபோல் நடித்த ராஜிதசேனாரத்தின போன்றோர்களும், இப்போது எங்கே இருக்கின்றார்கள் என்பதை வைத்தே நாம் புரிந்து கொள்ள முடியும் இவர்கள் யார் என்பதை.

தர்கா நகர் பிரச்சினை நடந்த போது மஹிந்த அவர்கள் பல கோடிகளை ஒதிக்கி நிவாரணம் வழங்கியிருந்தாலும், அந்த குற்றவாளிகளை கூண்டில் அடைக்க தவறியிருந்தார். அன்று இனவாதிகளை அடக்கத்துவங்கினால் நமது ஆட்சி ஆட்டம் கண்டுவிடும் என்று மஹிந்த நினைத்தாறேயொழிய முஸ்லிம் மக்களுக்கு நீதி வழங்க தவரியிருந்தார். இவ்வளவு சதிகளும் மேற்குலகினால் தனக்கு எதிராக நடத்தப்படுகின்றது என்பதை அறியாத மஹிந்த அவர்கள் இன்று அதனை புரிந்து கொண்டு, தவறை ஏற்றுக்கொள்வதையும் நாம் காண்கின்றோம்.

தன்னை எதிர்ப்பதற்கு தன்னுடைய சகாவாக இருந்த மைத்திரி அவர்களை மேற்குலகம் பயன்படுத்தும் என்று கனவில் கூட நினைக்கவில்லை, தன்னோடு அப்பம் சாப்பிட்டுவிட்டு அடுத்தநாள் அரசியலில் எதிரியாக மைத்திரி அவர்கள் மாறிய விடயம் மஹிந்தவின் சிந்தனைக்கு கிடைத்த தோல்விதான். மேற்குலகம் தனக்கு பிடிக்காத ஆட்சியாளர்களை எந்த வழியிலும் வீழ்த்துவார்கள் என்பது உலகமறிந்த உண்மையாகும், சதாம் ஹுசைன், கடாபி, முர்சித், முல்லா உமர், சியாஉல்ஹக், இப்படி பலபேரை எப்படி வீழ்த்தினார்கள் என்பது வரலாறாகும்.

மேற்குலகம் தன்னை குறிவைக்கின்றது என்பதை அறியாமல் மஹிந்த அவர்கள் ஆட்சிநடத்திய விதம் அவரது சாணக்கியத்துக்கு கிடைத்த தோல்விதான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆகவே, எது எப்படியிருந்தாலும் எந்த நோக்கத்துக்க இந்த நல்லரசாங்கத்தை கொண்டுவர முஸ்லிம்கள் நினைத்தார்களோ அந்த நினைப்பில் மண்ணை அள்ளிவாரிப் போட்டுள்ளது இந்த நல்லரசாங்கம். அத்தனை இனவாதிகளும் இப்போது நல்லரசாங்கத்தின் அரவணைப்பில் இருந்துகொண்டும், ஆட்சியாளர்களை தங்கள் கைக்குல் போட்டுக்கொண்டும் கச்சிதமாக காரியத்தை சாதித்து வருகின்ற விடயம் எத்தனை பேருக்கு தெறியும் என்பது படைத்த இறைவனுக்குத்தான் வெளிச்சம்.

அதற்கு உதாரணமாக மரிச்சிக்கட்டியை காடாக அறிவித்து வர்த்தமாணி வெளியிட்ட விடயம், பாத்தியா பள்ளிவாசல் கட்ட தடை விதித்தமை, கண்டி பள்ளிவாசல் டோம் கட்ட தடைவிதித்தமை, ஞானசாரவை கிழக்கில் தொல்பொருள் கண்காணிப்பாளராக நியமித்தது, அவரை கைது செய்ய தடைவிதித்தது, தம்புள்ள பள்ளி விடயத்தில் அலட்சியம் காட்டுவது என்று பல விடயங்களில் இந்த நல்லரசாங்கம் முஸ்லிம்களை ஏமாற்றிவருகின்றது.

இதனை புரிந்து கொள்வதற்கு முஸ்லிம் சமூகம் தயாராக வேண்டும், இல்லையென்றால் எதிரிகளின் திட்டத்துக்கு பழியாகி சின்னாபின்னப்பட வேண்டிய நிலைதான் ஏற்படும் என்பதே உண்மையாகும்.
எம்.எச்.எம்.இப்றாஹிம்,
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -