குடி நீருக்காக பல வருடம் காத்திருக்கும் லிந்துலை கொனன் தோட்ட மக்கள் -படங்கள்




க.கிஷாந்தன்-

லிந்துலை ஹோல்றீம் கொணன் தோட்டப்பரிவில் சுமார் 185 இற்கு மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இத்தோட்ட மக்கள் சுத்தமான குடி நீரினை பெற்றுக்கொள்ள முடியாமல் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக இங்குள்ள மக்கள் அழுது புலம்புகின்றனர்.

மலையக அரசியல் வாதிகள் தங்களின் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு எங்களுடைய் தேவைகளை பூர்த்திசெய்யவில்லையென இத்தோட்டமக்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 12 வருடங்களாக சுத்தமான குடி நீர்க்காக ஏங்கும் இம்மக்கள் இன்றும் விடிவுக்காக பீலி கரையில் காத்திருப்பதாக கவலை அடைகின்றனர். சுத்தமான குடி நீர் இல்லாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வரும் இவர்கள் அதிகாலை 05 மணிமுதல் 07 மணிவரை தண்ணீர்க்காக காத்தியிருக்கின்றனர்.

இதனால் தோட்ட தொழிலுக்கு நேரத்துடன் செல்லமுடியாமலும், மாணவர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாமல் உள்ளமையும் குறிப்பிடதக்கது.

அத்தோடு காலை நேரத்தில் சாப்பிடகூட முடியாத நிலையில் பட்டினியாக தொழிலுக்கு செல்லவேண்டிய நிலை இருப்பதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

மலையகம் என்றாலே இயற்கை வளங்கள் கொட்டிகிடக்கும் ஒரு பிரதேசமாகும். இதில் மிக முக்கியமான வளம் தான் நீர் வளம் எங்குப்பார்த்தாளும் குளங்கள், நீர் ஓடைகள், ஊற்று நீர் என இயற்கையாக காணப்படுகின்றது.

இவ்வாறு மலையகத்தில் நீர் வளங்கள் இருக்கின்ற போதிலும் இன்னும் இவர்கள் ஒரு கோப்பையில் சுத்தமான நீரினை பெற்றுக்கொள்ள முடியாமல் அவதிப்படும் நிலை இன்னும் தொடர்கின்றது.

இலங்கையில் நீர் பாசனை அமைச்சு தனியாக இருக்கின்ற போதிலும் இந்த அமைச்சின் செயல்பாடுகள் மலையக மக்களுக்கு எட்டா கனியாகவே உள்ளது.

இலங்கையை பொருத்தவரையில் கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு அமைச்சின் நடவடிக்கைகள் கனிசமான அளவு நடைபெறுவதை நாம் உணரமுடியும். பெருந்தோட்டத்தினை பொருத்தவரையில் நாட்டிற்கு உழைத்து உழைத்து தேய்ந்துபோன இச்சமூகம் பருகும் ஒரு கோப்பை குடி நீரும் கூட அசுத்தமாகவே உள்ளது.

இன்று எத்தனையோ தோட்டங்களில் வாழும் மக்கள் குடி நீரை பெற்றுக்கொள்ள முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதுடன் ஓரு குடம் நீர்க்காக ஒரு குழாயிலிருந்து வரும் நீருக்காக அடுக்கடுக்காக குடங்களையும், பிளாஸ்டிக் கேன்களையும் வைத்துவிட்டு பல மணிநேரம் காத்திருப்பது வேதனை தரும் விடயமாகும்.

மலையக அரசியல் வாதிகள் தங்களின் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இம்மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யாமல் இம்மக்களை அடிமையாக வைத்துக்கொண்டு அரசியல் காய் நகர்த்தும் செயல்பாடு பொருத்தமற்றதாகும்.

மலையக அரசியல் வாதிகள் எங்களுடைய பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறு இத்தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -