மீதொடமுல்லை அனர்த்தம் இயற்கையானது அல்லவெனவும், முறையில்லாத முகாமைத்துவத்தினாலேயே இது ஏற்பட்டது எனவும் கொழும்பு மாவட்ட ஐ.தே.க.யின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
மீதொடமுல்லை அனர்த்தம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையிலேயே இவாரு கூறினார்.
180 அடி உயரமான குப்பைகள், மக்கள் எதிர்ப்புக்கு மத்தியிலேயே குவிக்கப்பட்டன. இதற்கு தீர்வு சொல்ல அப்பிரதேசத்துக்குப் பொறுப்பான அதிகாரிகள் முன்வரவில்லை எனவும் மரிக்கார் குற்றம்சாட்டியுள்ளார்.
கொல்லன்னாவ, மீதொடமுல்லை குப்பை மேட்டை அகற்றுவதற்கான நடவடிக்கையை இதன்பிறகாவது உணர்வு பெறவேண்டும் எனவும் மரிக்கார் எம்.பி. அதிகாரிகளிடம் பகிரங்க வேண்டுகோளை விடுத்துள்ளார்.