ஏ.எம்.கீத் திருகோணமலை-
திருகோணமலை மூதூர் தளவைத்தியசாலையில் இருந்து இம்மாதம் 8ம் திகதி மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி தோப்பூர் பிரதேசம் அல்லை நகரைச் சேர்ந்த ஸபீர் றிமாஸா என்கின்ற 32 வயதான கர்பிணித்தாய் இன்று காலை திருகோணமலை பொது வைத்தியசாலை அதி தீவிரசிகிச்சை பிரிவில் மரணமானார்.
இறந்த கர்பிணித்தாயிற்கு இருமல்,சளி மற்றும் காச்சல் போன்ற நோய்களின் தாக்கம் அதிகரித்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை பலன் இன்றி மரணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.