காணிகளில் குப்பை கொட்டப்படுவதற்கு தடை - மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு

கர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உட்பட்ட காணிகளில் குப்பைகளை கொட்டப்படுவதை தடைசெய்வதற்கு எதிர்வரும் மே மாதம் முதல் பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைவாக எந்தவொரு உள்ளுராட்சி மன்ற நிறுவனத்திற்கு அல்லது அரச நிறுவனங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதற்கு காணி தேவைப்படுமாயின் இந்த நிறுவனங்கள் கொண்டுள்ள மானியங்களை பயன்படுத்தி அதற்கான கொடுப்பனவுகளை செலுத்தவேண்டும் என்று பாரிய நகர மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மீதொட்டமுல்லயில் குப்பைமேடு சரிந்து விழுந்தமை தொடர்பாக வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் இந்த சம்பவத்தினால் 69 வீடுகள் முழுமையாக சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வீடுகளுக்காக அரச நிதி கிட்டுமாயின் புதிய வீடுகளை வழங்குவதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதத்தில் மீதொட்ட குடப்பைமேடு தொடர்பாக ஆவணமொன்று பெருநகர மற்றும் மேல்மாகாண அமைச்சினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக மீதொட்டமுல்ல குப்பைமேட்டில் குப்பைகள் கொட்டப்படுவதை இடைநிறுத்துவதற்கும் இதற்கான மாற்று இடத்தை அடையாளம் காண்பதற்கும் கொழும்பு மாநகர சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்ததாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -