இக்பால்-
முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தியாளர்களான பாலமுனை அன்சீல், தாகீர் சேமன் ஆகியோர் நேற்று இரவு பதினொரு மணிக்கு பின்பு கல்முனை கடற்கரை பள்ளிக்கு அப்பாலுள்ள தமிழ் பிரதேச கடற்கரை மணலில் முஸ்லிம் காங்கிரசின் சாய்ந்தமருது பிரமுகர்களுடன் இரகசிய சந்திப்பு ஒன்றினை நடாத்தியுள்ளார்கள் என்று காதும் காதும் வைத்தமாதரி ஊருக்குள் பேசிக்கொள்கின்றார்கள்.
யாரையும் யாரும் சந்திக்கலாம். அதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் சனநடமாட்டம் இல்லாத பிரதேசத்தில் அதுவும் நல்லிரவு நேரத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பினால் மூன்று விதமான சந்தேகங்கள் எழும்புகின்றது.
1. சாய்ந்தமருதில் ஹசன் அலியின் பொது கூட்டம் நடைபெற உள்ளதனால் அதற்கு சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரசின் பக்கம் இருந்து எந்தவிதமான எதிர்ப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை கோருவதற்கான டீலிங் பேசியிருக்கலாம்.
2. அல்லது, அந்த சாய்ந்தமருது பிரமுகர்களை தங்கள் பக்கம் சேர்த்துக் கொள்வதற்கான அழைப்பாக இருந்திருக்கலாம்.
3. அல்லது, அதிருப்தியாளர்கள் மீண்டும் முஸ்லிம் காங்கிரசுடன் செர்ந்துகொள்வதர்காக தலைவருக்கு தூது அனுப்புவதற்கான பேச்சுவார்த்தையாக அது இருந்திருக்கலாம்.
என்பதுதான் அந்த மூன்று சந்தேகங்கலாகும்.
இதில் நான் ஒரு கருத்தினை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
அதாவது சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸ் பக்கம் இருந்து எந்தவித எதிர்ப்பும் வரமாட்டாது. நீங்கள் தாராளமாக கூட்டம் நடாத்தலாம். ஏனென்றால் இந்த பிரமுகர்களுக்கும் உணர்வு ரீதியாக கூட்டத்தினை குழப்புவதற்கும் எந்தவித தொடர்புகளோ அல்லது சக்திகளோ இல்லை. ஒரு காலமும் இருந்ததுமில்லை.
போராளிகளின் வீரத்தில் இவர்கள் நனைந்து கொண்டதுதான் வரலாறு. அதற்காக போராளிகள் சோர்வடைந்து விட்டார்கள் என்பது அர்த்தமல்ல. தங்களை வைத்து இவர்கள் வியாபாரம் செய்கின்றார்கள் என்பதனை போராளிகள் உணர்ந்துள்ளார்கள் என்பதுதான் அதன் அர்த்தமாகும்.
எனவே முஸ்லிம் காங்கிரசின் அசைக்க முடியாத கோட்டையான சாய்ந்தமருதில் ஜனநாயக ரீதியில் யாரும் வந்து தங்களது கருத்தினை தெரிவிக்கலாம். இதற்காக யாருடனும் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.
அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளை அவ்வளவு இலகுவில் மன மாற்றம் செய்துவிடவும் முடியாது.