ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று(22) மாலை கிண்ணியா மத்திய கல்லூரியின் அப்துல் மஜீத் மண்டபத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்றது.
கிண்ணியா பகுதியில் கடந்த காலங்களில் திருகோணமலை மாவட்டத்தில் அதிக உயிரிழப்புக்களையும் இப்பிரதேச மண் இழந்தமையும் அதிக நோயாளர்கள் இனங்கானப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.இதனைக் கருத்திற்கொண்டு உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் பேரில் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் தூதரகத்தினால் டெங்கு நோயாளர்களுக்கான பொருட்கள் இதன்போது சுமார் 300 பேர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன இதன்போது படுக்கை விரிப்பு, நுளம்பு வலை, பேரீட்சம் பழம் உட்பட பலபொருட்கள்கிண்ணியா, மூதூர், தோப்பூர், முள்ளிப்பொத்தானை,ஜமாலியா போன்ற பகுதிகளைச்சேர்ந்தவர்களுக்கு குறித்த பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
மேலும் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் பெற்றார் பாயிஸ் முஸ்தபா மற்றும் தாய் உட்பட திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் இலங்கை நாட்டுக்கான டுபாய் தூதுவர் ஒஸாமா அலாாளி,உள்ளூராட்சி மன்ற உதவி ஆணையாளர் எஸ்..சுதாகரன் நகர சபை பிரதேச சபை செயலாளர்கள் உட்பட பல உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.