குஜராத்தில் மதக்கலவரதினால் அளிக்கப்பட்ட வடவெளிக் கிராமம்.

ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் -

குஜராத்தில் 700 பேர் கொண்ட சங்பரிவார் கூட்டம் ஒன்று ஒரு கிராமத்தையே தீக்கிரையாக்கி நரவேட்டை! போர்களமான வடவெளி கிராமம்!

கடந்த மார்ச் மாதம் இரண்டு பள்ளி சிறுவர்களுக்கு இடையிலான சண்டையை பெரும் வன்முறைக் கலவரமாக்கி அமைதியை காவு வாங்கியுள்ளனர் சமூக விரோதிகள். அஹ்மதாபாத்தில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது வடவெளி கிராமம் . இதற்கு அருகில் சன்சார் என்ற கிராமம் உள்ளது.

பட்டான் பகுதியில் உள்ள பள்ளி யொன்றில் முஸ்லிம் சமூக மாணவனுக்கும் மற்றொரு சமூக மாணவனுக்கும் இடையே சண்டை மார்ச் 25ல் நடந்து முடிந்தது. 26ம் தேதி சன்சார் மற்றும் அருகில் இருந்த இரண்டு கிராமங்களில் இருந்தும் 700 பேர் கொண்ட கும்பல் நாட்டுத்துப்பாக்கிகளுடன் கூர்மையான ஆயுதங்களுடன் வடவெளி கிராமத்தை துவம்சம் செய்தது. 80 ல் இருந்து 100 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது தரைமட்டமாக்கப்பட்டன. உணவு தானியங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கடைகளும் வாகனங்களும் தப்பவில்லை.

50 வயது இப்ராகிம் பாய் பெலிம் கொல்லப்பட்டார். மேலும் ஒரு இளைஞர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். 25 பேர் படுகாயமடைந்தனர். 5 பேர் இன்னும் கவலைக்கிடமாக உள்ளனர். படுகொலைகளும் சூறையாடல்களும் தொடங்கி ஒன்றரை மணி நேரம் வரை காவல்துறை சம்பவ இடத்திற்கு வரவேயில்லை என அரற்றுகிறார் 72 வயது யாஸ்க்குள் பாய்.

இவரது குடும்பம் தற்போது வீடற்ற நிலையில் உள்ளது. காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லக்கூட காவல் வாகனங்கள் வரவில்லை. எனது தந்தையார் கடுமையாக தாக்கப்பட்டு நெடுநேரம் கீழே விழித்துக் கிடந்தார். நான் உயிருக்கு அஞ்சி ஓடிக்கொண்டிருந்த நிலையிலும் அவர்கள் என்னைத் தாக்குவதை நிறுத்தவில்லை என்கிறார் உயிரிழந்த பெலிமின் மகன். அவரது கால் நெற்றி மற்றும் வலது கையில் வாளால் வெட்டப்பட்ட ஆழமான காயங்கள் உள்ளன.

அவர்கள் தாக்குதலோடு நிறுத்தவில்லை ஒவ்வொரு வீட்டையும் சூறையாடினர். தீயிட்டுக் கொளுத்தப்பட்டு ஒவ்வொரு வீடும் தரைமட்டமாக்கப்பட்டன. அடுத்த மாதம் திருமணத்திற்காக சேமித்து வைக்கப்பட்ட நகைகளும், கால்நடைகளும் உணவு தானியங்களும் கொள்ளையடிக்கப்பட்டன. வீடுகளை இழந்த முஸ்லிம்கள் சிலருக்கு அப்பகுதி தலித் மக்கள் உணவு சமைத்து உபசரித்தனர் என்கிறார் வன்கார் தலித் சகோதரர். முதல் நாள் எங்கள் குழந்தைகள் பரீட்சை எழுதி முடித்துள்ளனர். மறுநாள் எங்கள் குழந்தைகள் எதிர்காலம் உள்பட அனைத்தையும் இழந்து விட்டோம் என தேம்புகிறார் யாஷிக்குள் பாய். வீடுகள் எரிக்கப்பட்டதை காவல்துறை வேடிக்கைப் பார்த்ததாக அஷ்ரப் பாய் ஷேய்க் தெரிவித்தார்.

இந்த வன்முறை வெடிப்பதற்கு முதல்நாள் வடவெளியில் 2000 மக்கள் கூடி பஞ்சாயத்து தலைவரைத் தேர்ந்தெடுக்க முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர். போட்டியின்றி தேர்தல் நடத்துவது குறித்த ஆலோசனையின் போது அங்கு கூடியிருந்த 300 முஸ்லிம் குடும்பங்கள் சலீம் பாய் என்பவரை இரண்டரை ஆண்டுகளுக்குத் தலைவராக முடிவு செய்வோம் என தெரிவித்துள்ளனர்.

அடுத்த இரண்டரை ஆண்டுகளை பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பதவியில் வரலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்டது போல் கலைந்த அந்தக் கும்பல் மறுநாள் சிறுவர் சண்டையைக் காரணமாக்கி அமைதியைக் குலைத்து சிறுபான்மை சமூகத்தைப் பழிவாங்கியது. குழந்தைகளின் கல்வியை நாசமாக்கிய பின்னர் வளத்தையும் சிதைத்த மதவெறி பாசிச சக்திகள் யாருடைய துணிச்சலில் இது போன்ற காரியங்களில் இறங்கியுள்ளனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

தார்ப்பூர் மருத்துவமனையில் வடவெளி கிராம முஸ்லிம்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். அகதிகளின் கூடாரங்கள் அதிகரித்த படியே உள்ளது. வடவெளி பகுதியில் ஜுவாலைக்குப் பின் புகை மூட்டம் பரவுகிறது. காவல்துறையினரைத் தவிர வேறு மனித நடமாட்டமே இல்லை. இத்துயர நிகழ்வுக்குப் பிறகு அஹமதாபாத்தில் செயல்பட்டு வரும் ஜன் சங்கரஷ் மன்ச், ஜன் விகாச், ஆக்சன் ஏய்டு போன்ற மனித உரிமை அமைப்புகள் உண்மைக் கண்டறிவதற்காக சம்பவ இடத்திற்குச் சென்று தகவல்களைத் திரட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மனித உரிமை அமைப்பின் அறிக்கை

இந்தக் கிராமத்தில் 350 முஸ்லிம்கள், 700 பட்டேல் சாதியினர், 60 தர்பார் சாதியினர், 150 தாக்குர், 150 தலித்துகள், 50 ராவல், 50 பிரஜாவதி, 30ராபரி, 40 தேவி புஜக் என பல சாதியினருக்கு மத்தியில் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றன. 2002ல் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இந்தக் கிராம மக்கள் முடிந்தளவு முஸ்லிம் மக்களின் உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட இடத்திலும் இந்துத்துவ சிறுபான்மை விரோத பாஸிஸம் வளர்ந்திருப்பது ஆபத்தானதாக உணரப்படுகின்றது. குஜராத்தின் சாம்ராஸ் கிராமப் பஞ்சாயத்தின் திட்டம் இக்கிராமத்தில் வரவேற்கப்பட்டு நடைமுறைப்படுத்தப் படுகிறது.

இதற்கு முக்கியமான நபராகத் திகழ்ந்தவர் இப்ராஹிம் பாய் லால்பெம் என்பவர் தான். கலவரத்தின் போது இவர் மதிவெறியர்களின் குண்டுகளுக்கு இரையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. தாக்கூர் சாதியைச் சார்ந்த சுமார் ஏழாயிரம் பேர் வடடெல்லியைச் சுற்றியுள்ள தாரிப்பூர், ராம்பூர் மெர்வாடா கிராமங்களில் இருந்து படையெடுத்து முஸ்லிம் மக்களைத் தாக்கியும் அவர்களின் வீடுகளுக்கு தீயிட்டுக் கொளுத்தியும் பொருளாதாரத்தை நாசமாக்கியுள்ளார்கள். 142 வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. 100 வீடுகள் தீயிட்டு முழுவதுமாக அழிக்கப்பட்டன.

கலவரத்தின் போது இந்துத்துவ மதவெறியர்களைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கைப் பார்த்தது மட்டுமல்லாமல் கலவரக்காரர்களை உற்சாகப்படுத்தி தன் ஈனபுத்தியை காட்டியுள்ளது குஜாரத் காவல்துறை.

குஜராத் காவல்துறை அதிகாரிகள் காவி பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதை மீண்டும் இந்த வெறிச்செயல் நமக்கு நினைவூட்டுகிறது. இரண்டு முதல் தகவல் அறிக்கைகளை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்திருக்கிறது காவல்துறை. அதில் ஒன்று கலவரத்தால் உயிர் இழந்து உடைமை இழந்து பொருளாதாரத்தையும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் முஸ்லிம் சமூகத்தின் மீது வழக்குப் போட்டு 14 முஸ்லிம்களைக் கைது செய்திருக்கிறது காக்கி உடை அணிந்த காவி துறை.

இந்தக் கலவரத்திற்கு மூளையாக செயல்பட்டது சிவசேனா என்பதை உண்மை கண்டறியும் குழு சொல்லியிருக்கிறது. குறிப்பாக பா.ஜ.க.வைச் சேர்ந்த வினெய் சிங் என்ற வழக்கறிஞர் இதில் ஈடுபட்டிருக்கிறார் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

இந்த கலவரத்தை எந்தவொரு இந்திய ஊடகங்களும் இன்னும் வெளிக்காட்டவுமில்லை பெரிதுபடுத்தவில்லையாம் ..நமக்கும் சற்று முன்னர்தான் தமிழ் ஊடகத்திக்கு இந்த தகவல் முழுவதும் தாமதமாக கிடைக்கபெற்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -