நீதிமன்ற கட்டளை கிழிப்பு: பார்த்துக்ககொண்டிருந்த பொலிசாரை ஆஜராகுமாறு நீதிமன்றம் கட்டளை

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட கட்டளையை கிழித்து காலுக்கு கீழே போட்டு மிரித்து தூஷன வார்த்தைகளால் பேசிய சம்பவத்தை பார்த்துக்ககொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை மே மாதம் 02ம் திகதி நீதிமன்றத்திற்கு ஆஜராகுமாறு நேற்று (28) திருகோணமலை நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் கடந்த 25ம் திகதி வேலையில்லாப்பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் முன்னெடுத்த போது திருகோணமலை தலைமையக பொலிஸாரினால் ஆர்ப்பாட்டத்திற்கு தற்காலிக தடை உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தை கோரி விண்ணப்பத்தை தாக்கல் செய்யதனர்.


அவ்விண்ணப்பத்தை விசாரித்த திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா அமைதியான முறையில் பொதுமக்களுக்கும் பொதுச்சொத்துக்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்படாதவாறு வேலையில்லப பட்டதாரிகளுக்கு கட்டளை பிறப்பித்தார்.


திருகோணமலை நீதிமன்றத்தினால் வழங்கிய கட்டளையை தலைமையக பொலிஸாருக்கு முன்னால் வேலையில்லா பட்டதாரிகளின் ஆர்பாட்டத்திற்கு ஆதரவிளித்த பௌத்த பிக்கு உட்பட மூவர் கிழித்தெரிந்தனர்.


அவ்வேளையில் அச்செயற்பாட்டை பொலிஸார் பார்த்துக்கொண்டிருந்ததை கண்டித்து திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நீதிமன்றத்திற்கு முன்னால் நேற்று (29) வௌ்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்ட்டது.


இதேவேளை திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தினால் தலைமையக பொலிஸாரினால் கோவையிடப்பட்ட வழக்கினை நகர்த்தல் பிரேரணை (மோசம் போடுதல்) மூலம் நீதிமன்றத்திற்கு அழைத்து விசாரணை செய்த போதே திருகோணமலை பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா மே மாதம் 02ம் திகதி உதவி பொலிஸ் அத்தியட்சகர்.தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் அவ்விடத்தில் கடமையாற்றிய பொலிஸ் பொறுப்பதிகாரிகளை நீதிமன்றத்திற்கு ஆஜராகுமாறு கட்டளையிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -