ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவு மட்டக்களப்பு நகரம் மேல் மாடித் தெரிவிலுள்ள வீடொன்றின் கிணற்றில் வீசப்பட்டுக் கிடந்த 6 நாள் சிசுவின் தாயை திங்கட்கிழமை 03.04.2017 கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொல்லப்பட்ட சிசுவின் தாய் தப்பித் தலைமறைவாகியிருந்த சமயம் மட்டக்களப்பு, கல்லடியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
வைத்தியத் தம்பதியினர் வாடகைக்குத் தங்கியிருந்த மேற்படி வீதியை அண்டிய வீட்டில் துறைநீலாவணையைச் சேர்ந்த இப்பணிப்பெண் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இவரே கடந்த 27ஆம் திகதி இச்சிசுவைப் பிரசவித்துவிட்டு அங்கிருந்த கிணற்றில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளது விசாரணைகளில் இருந்து தெரியவந்தததையடுத்து பொலிஸார் தலைமறைவாகியிருந்த பணிப்பெண்ணைக் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
கணவனைப் பிரிந்து வாழும் இப்பெண்மணியின் மற்றொரு பெண் பிள்ளை பராமரிப்பு நிலையமொன்றில் வாழ்ந்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.