கிண்ணியா நகரசபை – பிரதேச சபை எல்லையை மறுசீரமைக்க இம்ரான் எம்.பி கோரிக்கை

கிண்ணியா நகரசபை மற்றும் பிரதேச சபை எல்லையை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் மாகாணசபைகள் மற்றும் உள்@ராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த புதன் கிழமை அமைச்சரை அவரது அமைச்சில் சந்தித்து இக்கோரிக்கையை அவர் விடுத்துள்ளார். அக்கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவு 146.9 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டது. இதில் வரும் நகரசபை 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் பிரதேச சபை 14 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.

எனினும் நகரசபை சுமார் 9 சதுர கிலோமீற்றர் பரப்பளவினுள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனால் நகர சபைப் பகுதியில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள அரச காணிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது. இது எதிர்காலத்தில் இப்பகுதியில் பாரிய சிக்கல்களைத் தோற்றுவிக்கும்.

எனவே இதனை நிவர்த்திக்கும் பொருட்டு இந்த இரு சபைகளின் எல்லையில் இருக்கும் உப்பாறு கிராம உத்தியோகத்தர் பிரிவை இரண்டாகப் பிரித்து அதன் ஒரு பகுதியை கிண்ணியா நகர சபையின் எல்லையுடன் இணைக்க வேண்டும். உப்பாறு கிராம உத்தியோகத்தர் பிரிவு பெருமளவு நிலப்பரப்பைக் கொண்டுள்ளதால் இது சாத்தியமான விடயம் என்றும் அக்கோரிக்கையில் இம்ரான் எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -