சப்னி அஹமட்-
இறக்காமம் பிரதேசத்தில் வைத்தியர்கள் சுழற்சி முறையில் வைத்தியர்கள் கடையமாற்றுவதாகவும், தாதியர்கள் பல வைத்தியசாலைகளில் இருந்தும் அழைக்கப்பட்டு கடமையில் ஈடுப்பட்டு வருவதாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
இன்று மாலை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் ஆகியோர் குறித்த வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு உள்ள நிலமைகளை பார்வையிட்ட பின்னர் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
குறித்த வைத்தியசாலை பிரதேச வைத்தியசாலைஎன்பதால் அங்கு அவ்வைத்தியசாலைக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது அங்கு பல அபிவிருத்தி திட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளனர். ஆகவே இது ஒரு அவசர அனர்த்தம் என்பதானால் அங்கு இடப்பற்றாக்குறை உள்ளதை நாம் அவதானித்தமைக்கு அமைய உடனடியாக அங்கு தற்காலிக இடம் அமைக்கபட்டுள்ளது குறிப்பாக இவ்வைத்தியசாலையில் அறுநூறுக்கும் மேற்பட்ட நோயாளிகளை அனுமதிப்பதற்கான இடம் போதாமையினாலையே அவ்வாறு தற்காலிக இடம் மேற்கொள்ளப்பட்டு நோயாளிகளை அவசரமாக குணப்படுத்து வேலைகளின் ஈடுப்பட்டனர்.
மேலும், அம்பாறை, கல்முனை,சம்மாந்துறை, அக்கரைப்பற்று, திருக்கோவில் போன்ற வைத்தியசாலைகளுக்கு நோயாளிகளை மாற்றி முழுமையான சிகிச்சை வழங்கப்பட்டு கொண்டிப்பதுடன் எமது கிழக்கு மாகாணசுகாதார அமைச்சும்,பிராந்தியங்களின் சுகாதார பணிப்பாளர்களின் ஒத்துழைப்புக்களுடன் மருத்துவப்பொருட்கள், வைத்தியர்கள், தாதியர்கள், வாகாண வசதிகள் உடனும் மக்களை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை செய்து வருவதுதாகவும், தற்போது இறக்காம வைத்தியசாலையில் நேற்றைய நோயாளர்களின் அனுமதியை விட இன்று குறைந்து வைத்தியசாலையின் நிலைப்பாடு சுமூகமான நிலையில் உள்ளதுடன். அனைத்து கடமைகளையும் எமது சுகாதார அமைச்சும், வைத்தியர்களும், தாதியர்களும், ஊழியர்களும் தியாகத்துடன் சேவை செய்து வருகின்றனர். எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.