எஸ்.அஷ்ரப்கான்-
பொலநறுவை வெலிகந்த பிரதேச செயலகத்திற்குட்பட்ட இல. 284 குடாப்பொக்குன எனும் கிராமத்தில் வசிக்கும் முஹைதீன் பிச்சை மாஜிதீன் என்பவர் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் தனது உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்.
இவருடைய சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக 35லட்சம் ரூபா நிதி தேவைப்படுவதாகவும், தனது குடும்பத்தினரிடமிருந்து சுமார் 20லட்சம் ரூபா நிதி கிடைத்துள்ளதாகவும் மீதிப் பணத்தினை தனவந்தர்களிடமும், ஏனையவர்களிடமும் எதிர்பார்க்கின்றார்.
முஹைதீன் பிச்சை மாஜிதீன் அந்நியப் பெண்னொருவரை இஸ்லாமிய மார்க்கத்தில் இணைத்து திருமணம் முடித்துள்ளார். அவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார். அவருடைய பிள்ளை அங்கவீனமுற்ற நிலையில் இருப்பதுடன் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்.
எனவே உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் முஹைதீன் பிச்சை மாஜிதீனுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக பெருமனங்கொண்டு உதவுவதற்கு முன்வாருங்கள்.
உதவி செய்ய விரும்புவோர் கீழ் குறிப்பிடப்படும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும். அல்லது ஏ.எம். மாஹீர், கணக்கு இல. 8363987, இலங்கை வங்கி எனும் கணக்கிற்கு உங்களது உதவிகளையும் செய்யமுடியும்.
(ஏ.எம். மாஹீர்)
தொலைபேசி இல. 0772880001