அஷ்ரப் ஏ சமத்-
நகர திட்டமிடல் மற்றும் நீர் விநியோக வடிகாலமைப்பு அமைச்சா் ரவுப் ஹக்கீம் நேற்று(28) பொல்காவல, பொத்துகர, அலவுவ பிரதேசங்களது நீர் விநியோகத்திட்டத்தின் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்து வைத்தாா். இவ் வைபவத்தில் அமைச்சா் அநுரபிரியதா்சன யாப்பா, இராஜாங்க அமைச்சா் சுதர்சனி பெர்ணான்டோ பிள்ளை முஸ்லீம் காங்கிரஸ் பொல்காவல மாகாணசபை உறுப்பிணா் சட்டத்தரனி ஜவா்ஹா்சா றிஸ்வி மற்றும் ஜ.தே.கட்சி அமைப்பாளா்கள் மகாணசபை உறுப்பிணா்களும் கலந்து கொண்டனா்.
இத்திட்டத்திற்காக ருபா, 20,207 மில்லியன் ருபா செலவளிக்கப்படுகின்றது. இத்திட்டத்திற்கு இந்தியா எக்சிம் வங்கி 91.08 மில்லியன் ரூபாவையும், இலங்கை வங்கி 16.2 மில்லியன் ரூபா, இலங்கை அரசு 4547.8 மில்லியன் ரூபா, குறைந்த வட்டிக்கான இக் கடனை நீர்விநியோக வடிகாலமைப்புச் சபைக்கு வழங்கியுள்ளது. இத்திட்டம் பூரணப்படுத்தியதும் இப் பிரதேசத்தில் குடி நீர் தற்போதைய நிலையில் 4வீதத்தில் 64வீதத்திற்கு உயரும். இதன் மூலம் 167 கிராம சேவகா் பிரிவில் வாழும் மக்கள் நன்மையடைகின்றனா்.
மேலும் அமைச்சா் ஹக்கீம் தெரிவித்ததாவது -
சாதாரணமாக ஒரு லீட்டா் குடி நீர் போத்தலை ரூ.60 கொடுத்து வாங்குகின்றோம். ஆனால் நீர்விநியோக வடிகாலமைப்புச் சபை 1000 லீட்டரை 12 ருபாவுக்கே வழங்குகின்றது. நீர்கட்டணத்தினை மறுபரிசீலனை செய்து நாம் நீர்கட்டனத்தினை அதிகரப்போம். இதனை நாம் செய்ய ஆரம்பிக்கும்போது ஊடகங்கள் தொழிற்சங்கங்கள் பாரிய ஊடக பிரச்சாரங்களை ஏற்படுத்தி பிழையானதொரு விளக்கத்தினை மக்களுக்கு வழங்குகின்றனா்.
அண்மையில் நீர் விநியோகத்தினை கங்கைகளில் இருந்து எடுப்பதற்கு அமைச்சரவை பத்திரம் சமா்ப்பித்தால் அதற்காக பல லைன் அமைச்சா்கள் உள்ளனா். ஒவ்வொருவரும் பல கதைகளைக் கூறி அதனை தடுக்கின்றனா். ஆகவே நீர், ஆறு குளம் கங்கை நதிகள் சூழல் கொண்ட ஒரு நிலையான ஒர் அதிகார சபை உறுவாக்கப்படல் வேண்டும்.
இந்த நாட்டில் நீர்விநியோகத்தினை சுத்தமாக குழாய் மூலமாக வழங்குவதற்காக 400 பொறியியலாளா்களும், 1000 உதவி பொறியியலாளா்களும் இப் பணிக்காக பாரிய சேவையை செய்து வருகின்றனா். குடிநீர் குழாய்களை நிலத்துக்கடியில் வைத்து டொன் கணக்கில் நீரை அனுப்புகின்றோம். அதற்காக பாரிய எரிபொருள் செலாவாகின்றது. மகா ஓயா திட்டத்தின் இரண்டு பக்கமும் மக்கள் கட்டிடங்களையும் வீடுகளையும் அமைத்து மனல் அள்ளுவதால் நீர்மட்டம் குறைந்துள்ளது. மாகோ கங்கையில் இருநந்து 1000க்கனக்கான நீர்மடுவில் இருந்து நீரைப் பெறுகின்றோம்.
இத்திட்டத்திற்காக பிரதமா் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து இந்திய கடன் திட்டத்திற்கு குறைந்த வட்டிக் கடன் கேட்டதற்கினங்கவே இது வழங்கப்படுகின்றது. ஒருபோதும் நீர் வடிகாலமைப்புச் சபைக்கு திரைசேரி பணம் வழங்குவதில்லை அவா்கள் கடன் பெறவும் செலுத்தவும் உத்தரவாத அனுமதியை மட்டுமே வழங்குகின்றனா். குருநாகலில் மேலும் கட்டும்கம்பல, பண்னல, மாகாந்த குலியாப்பிட்டிய திட்டத்திற்கு இதே இந்தியாவின் உதவித்திட்டத்தின் கீழ் திட்டம் ஆரம்பிக்கப்படும் இதற்காக எதிா்வரும் மே 10, 11ஆம் திகதிகளில் இலங்கை வரும் இந்தியப் பிரதமரிடம் ஜனாதிபதி பிரதம மந்திரி ஊடாக இலகு வட்டி கடன் அடிப்படையில் நிதி பெற பேச்சுவாா்த்தை நடாத்தப்படும். என அமைச்சா் ஹக்கீம் தெரிவித்தார்.