வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகிய லொறி -படம் இணைப்பு


க.கிஷாந்தன்,நோட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்திரன் -


மொறட்டுவ பகுதியிலிருந்து அம்பேவெல பகுதியை நோக்கிச் சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

அட்டன் - கொழும்பு பிரதான வீதியில் அட்டன் மல்லியப்பு சந்தி பகுதியில் குறித்த லொறி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

07.04.2017 அன்று அதிகாலை 3 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக அட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

மொறட்டுவ பகுதியிலிருந்து அம்பேவெல பகுதிக்கு ஹைலண்ட் பால்மா வெற்று பக்கட்களை கொண்டுச் சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், எனினும் சாரதி காயங்களுக்குள்ளாகி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். உதவியாளர் சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -