வாழ்கை எனும் கடுகதியில்
பணிக்கும் மனிதா
நீ....
அதிவேகமாய் காடுகளையும் மேடுகளைம்
விரும்பியோ விரும்பாமலோ கடந்து தான் செல்கிறாய்.
நீ கடந்து செல்லும் பாதைகள் யாவும்
உனக்கு வினோதமாகத்தான் இருக்கிறது
நீ பயணிப்பது புகையிரதம் என்பதால்
உன் பயணம் மிக வேகமாகவே செல்கிறது
நீ பயணம் செய்யும் கடு கதி பயணம்
உன்னைப்பற்றியும் உன் எதிர் காலம் பற்றியும்
சிந்திக்கச்செய்வதில்லை
அதில் சிரமங்கள் இருந்தாலும்
அது உனக்கு பெரிதாய் தோனுவதில்லை
அப்பயணத்தில் நீ கானும் காட்சிகள் யாவும்
உன்னை மெய் மரக்கச் செய்யகிறது.
அது போலவே நம் வாழ்கைப்பயணமும்
நம் உலக வாழ்வில் கானும் காட்சிகள் யாவும்
கண்களையும் உள்ளங்களையும் திருடிக்கொண்டு
மனம் நாடும் திசைகளை நோக்கியே பயணிக்கிறது.
நமது லட்சியம் நமது பிறப்பின் நோக்கம்
நம்மை படைத்த இறைவனின் சிந்தனைகளையும்
மறக்கடிக்கச்செய்து கடுகதியிலே எம்மை
மரண வாசலின் முன்னே
நிறுத்தி விட்டுச்செல்கிறது காலம்
அல்லது வாழ்கை என்னும் கடுகதி.
பயணத்தின் போது
தன் பயணப் பொதிகளையும்
பயணத்துக்கு தேவயான அனைத்து உடமைகளையும்
பறிகொடுத்தவன் போல் திடுக்கிட்டு
இரண்டு கைகலாலும் தன்னிரு கண்களையும்
வியப்புடன் கசக்கி திகைத்து நிற்குகிறான்.
இந்த நிலை வருவதற்கு முன்
என் பிறப்பின் லட்சியம் என்ன?
எதற்காக பிறந்தேன் எதை நோக்கி
என வாழ்கைப்பயணம் தொடர்கிறது
என்னை படைத்தவன் யார் என
சிந்திக்கும் ஆற்றலை பெற்ற மனிதன்
அவன் புனிதனாக மாறி தன் வாழ்வினையும்
வென்று விடுகிறான்...
அவன் சிறந்து சிந்திக்கும் போது
படைத்த இறைவனுக்கு
நன்றி உடையவனாகவும் மாறி விடுகிறான்.
நடப்பதற்கு இரு கால்களையும் பிடிப்பதற்கு
இரு கரங்களையும் பார்த்து ரசிக்குமிரு
அழகிய கண்கள் அழகாக பேசும்
அற்புத ஆற்றலும் கொண்டு
பளபளக்கும் மேனியும் சிந்திக்கும்
திறன் பெற்ற மூலை' அன்பு, காதல்,
நட்குணங்கள் கொண்டு
இப்பிர பஞ்சத்தில் ஓர்
அழகு வரப்பிரசாதம் கொடுத்து
மண்ணுலகில் மின்னும் மானுடமாக
சிறப்பாக்கி இருக்கிறதை எண்ணி
இறைவனுக்கு நன்றி உடையவனாகவும்
மாறி விடுகிறான்...
எனவே கங்கை நதி ஓடுவது
முடிவொன்று இல்லாமலா?
இல்லை அது கடலை நோக்கியே
ஓடிக் கொண்டிருக்கிறது.
அதுபோல் நமது வாழ்வும்
மரணமெணும் கல்லரை
முடிவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது.
கழிந்து செல்லும் நிமிடங்கள் யாவும்
நாம் கடலில் வீசிய கட்களாகும்.
பேசிவிட்ட சொற்களைக்கூட
மீண்டும் அது போல் சொல்லி விடலாம்
ஆனால் கடலில் வீசிய அதே கற்களை
தேடுவது என்பது சாத்தியமாகுமா?
எனவே அதை விடவும்
சிறப்பு மிக்க நமது வாழ்கை பயணத்தை
சிந்தித்து வெல்வதே
நமது லட்சியங்கலாகும்..,.
-ஆதில்-