நிந்தவூர் உமர் அலியின் “வாப்பாடம்மா” கவிதை நூல் வெளியீடு!

நிந்தவூரைச் சேர்ந்த எழுத்தாளரும் கவிஞருமான மு.இ.உமர் அலி அவர்களது முதலாவது கவிதை நூல் 08.04.2018 சனிக்கிழமை காலை, நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர்கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

அல் ஹாபிழ் அஸ்கர் ஆதம் அவர்களது கிறாஅத்துடன் ஆரம்பமான ‘வாப்பாடம்மா” எனும் தலைப்பிலான கிராமிய வாழ்க்கைமுறை தழுவிய இந்நூல் அறிமுக விழாவில் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை தலைவரும் தமிழ்த்துறை பேராசிரியருமான அல்ஹாஜ் ரமீஸ் அப்துல்லா அவர்கள் கலந்து கொண்டார்.

கிறா அத்தினை தொடர்ந்து நிந்தவூர் கலை இலக்கிய பேரவையின் அங்கத்தவர்களான மர்ஹும்கள் ஹசனார் சக்காப்,ஹிதாயத்துல்லாஹ் மேர்சா அவர்களுக்கான பிரார்த்தனை நடைபெற்றது.

முதற்பிரதி நூலாசிரியரின் தாயாருக்கு வழங்கி வைக்கப்பட்டது.நூலாய்வு ஆய்வாளரும் விமர்சகரும் இலங்கை உரையாடலுக்கும்,ஆராய்ச்சிக்குமான நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளருமான சிராஜ் மசூர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

தேசிய நீர்வளங்கல்கள் வடிகாலமைப்பு சபையின் பிரதம பொறியியலாளர் கவிஞர் தம்பிலெப்பை இஸ்மாயில் ,கலாபூசணம் மக்கீன் ஹாஜி ,ஓய்வுபெற்ற ஒசிரியர் KL நூறு முஹம்மது அவர்களது உரைகள் நிகழ்வினை சிறப்படையச் செய்தன.எழுகவி ஜலீல் அவர்களது செல்லத்தங்கம் எனும் கவிதை அரங்கினை களைகட்டச்செய்தது.கவிஞன் இப்ராஹீம் அஹ்சன் மற்றும் கவிஞர் மர்ஹும் ஹசனார் சக்காப் சக்காப் அவர்களது புதல்வி மிப்ரா சக்காப் வாழ்த்துக்கவிதை வாசித்தனர்.

நாம் இழந்து விட்ட கிராமிய வாழ்க்கை முறை இக்கவிதை நூலினூடாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளதை காணக்கிடைக்கின்றது .சமூகவியல் தொடர்பான எதிர்கால கல்வியியல் ஆய்வு நடவடிக்கைகளுக்கு இந்நூலினை பயன்படுத்த முடியும்.இதுபோன்ற இலக்கிய ஒன்றுகூடல்கள் அடிக்கடி நடைபறுவது எமது சமூகத்திற்கு மிகவும் அவசியமானது.என்று இவ்விழாவில் சிறப்புரையாற்றிய பேராசிரியர் ரமீஸ அப்துல்லா அவர்கள் குறிப்பிட்டார்.

நிந்தவூர் கலை இலக்கிய பேரவையின் தலைவர் டாக்டர் அல்ஹாஜ்:ஜாபிர் அவர்களது தலைமையிலும் இஸ்லாமிய தமிழ் இலக்கிய காவலன் அல்ஹாஜ் செய்யதுஹசன் மௌலானனா அவர்களது முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தினைச்சேர்ந்த கல்விமான்கள், இலக்கியவாதிகள், படைப்பாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் ,ஊடகவியலாளர்கள் முகநூல் நண்பர்கள் உட்பட இன்னும் பலர் கலந்து சிறப்பித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -