ஏ.எம். கீத் திருகோணமலை-
திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிறிவுக்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் பிறந்து திருமணம் முடித்ததில் திருகோணமலை நகரின் இராஜவரோதயம் வீதியில் வசித்த பகீதரன் பிரதீபா (வயது38)என்பவர் நேற்று நன்பகல் 1.00 மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மரணமாணார்.கடந்த 10.04.2017 திகதி தொடக்கம் திருகோணமலை நகரின் தனியார் வைத்தியசலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை 8.00 மணியளவில் வாந்தி மற்றும் வயுற்றுப்போக்கு அதிகரித்த நிலையில் மீண்டும் தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே மலக்குளாயில் இரத்தக்கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து அவ்வைத்தியசாலை வைத்தியர்களின் ஆலோசனையடுத்து மேலதிக சிகிச்சைக்காக பொது வைத்தியசாலைக்கு காலை 11.00 மணியளவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 1.00 மணியளவில் அப்பெண்னிற்கு இறப்ப நேரிட்டுள்ளது.
மேலும் இது சம்மந்தமாக பொதுவைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் திருமதி ராஜ்மோகன் அனுஷியாவை தொடர்பு கொண்டபோதும் அவர் சுமார் 3.00 மணித்தியாளங்களாக என்னுடைய தொலை பேசி அலைப்பை நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.