க.கிஷாந்தன்-
மொறட்டுவ பகுதியிலிருந்து அம்பேவெல பகுதியை நோக்கிச் சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அட்டன் - கொழும்பு பிரதான வீதியில் அட்டன் மல்லியப்பு சந்தி பகுதியில் குறித்த லொறி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
07.04.2017 அன்று அதிகாலை 3 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக அட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். மொறட்டுவ பகுதியிலிருந்து அம்பேவெல பகுதிக்கு ஹைலண்ட் பால்மா வெற்று பக்கட்களை கொண்டுச் சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், எனினும் சாரதி காயங்களுக்குள்ளாகி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். உதவியாளர் சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.