”மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது தவறாகும்” பிரதமர்

நாட்டில் தற்போது பூதாகரமாக உருவெடுத்துள்ள குப்பை பிரச்சினையை மையப்படுத்தி, மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது தவறாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தின் திட்டங்களால் சூழல் பாதிப்பு ஏற்படுவதாக இருப்பின் அது நிரூபிக்கப்படின், திட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டு திட்டம் மாற்றியமைக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு நேற்று (21) மாலை விஜயம் செய்த பிரதமர், அங்கு வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த பிரதமர், இதுவரை குப்பைகள் கொலன்னாவையில் கொட்டப்பட்டு வந்த நிலையில், அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக அதற்கு மாற்று திட்டமொன்றை கையாள வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் காணப்படுகிறது. அதேவேளை, டெங்கு மற்றும் எச்1 என்1 போன்ற தொற்றுக்கள் பரவக்கூடிய அபாயம் காணப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி அரசின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக திகழ்வது தவறாகும்.

இந்த திட்டங்களால் தமது பிரதேச சூழலில் பாதிப்பு ஏற்படுவதாக இருப்பின் அதுகுறித்து கலந்துரையாடி தெளிவுபடுத்துங்கள். அப்படி நிரூபிக்கப்பட்டால் நாங்கள் திருத்தம் ஏற்படுத்தி திட்டத்தை மாற்றுவோம். அவ்வாறின்றி போராட்டங்கள் தொடருமாயின், ஒட்டுமொத்த நாட்டையும் கருத்திற்கொண்டு தீர்மானங்கள் எடுக்க நேரிடும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -