இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் - கூட்டமைப்பின் “மே தின” கொள்கை

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் அம்பாறை மாவட்டத்திலும் இந்தமுறை மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 

மே 01 ஆம் திகதி திங்கட்கிழமை தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மேதினம் பெரியளவில் கொண்டாடப்படுகின்றது. அந்தவகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின கூட்டம் கிளிநொச்சி மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளன. தொழிலாளர் உரிமை, மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் மிக விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும். 

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் போன்ற விடயங்களை வலியுறுத்தி மே தினக் கூட்டம் நடைபெறும். அம்பாறை மாவட்டத்தில் நடைபெறும் மே தினக் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உட்பட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளதாக அவர் தெரிவித்தார். 

தற்கால அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தீர்மானங்களை நிறைவேற்றி, மக்களின் உரிமைகளை வென்றெடுப்போம் என அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -